| ADDED : மே 24, 2024 06:13 AM
ஷிவமொகா: பைக்கில் செல்லும் போது, தலையில் இளநீர் விழுந்ததில், சிறுவன் 'கோமா' நிலைக்கு சென்றார்.ஷிவமொகா தீர்த்தஹள்ளி நெடுஞ்சாலையின், காஜனுார் செக் போஸ்ட் அருகில், சில நாட்களுக்கு முன், பைக் சென்று கொண்டிருந்தது. பின் இருக்கையில் 16 வயது சிறுவன் அமர்ந்து பயணித்தார்.அப்போது காற்று பலமாக வீச துவங்கியது. நெடுஞ்சாலை ஓரமாக சாய்ந்திருந்த தென்னை மரத்தில் இருந்து இளநீர், காற்றின் வேகம் தாங்காமல் சிறுவன் தலை விழுந்தது.தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. கோமா நிலைக்கு சென்றுஉள்ளார்.மகனின் நிலையை பார்த்து வருந்திய பெற்றோர், தென்னை மரத்தின் உரிமையாளர் மற்றும் நெடுஞ்சாலை வளர்ச்சி ஆணையத்தின் மீதும், துங்கா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார்.