உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திறப்பு விழா காணும் முன்பே டமால் ஆன பாலம்: ரூ.12 கோடி வீண்

திறப்பு விழா காணும் முன்பே டமால் ஆன பாலம்: ரூ.12 கோடி வீண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் ரூ. 12 கோடி செலவில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் திறப்பு விழா காணும் முன்பே 'டமால்' ஆகும் வீடியோ வைரலாகி வருகிறதுபீஹார் மாநிலம் அராரியா மாவட்டம் பக்ரா நதியின் குறுக்கே ரூ. 12 கோடியில் சிக்டி, குருஷகந்தா நகரை இணைக்கும் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தேதி குறிப்பிடாமல் திறப்பு விழாவிற்காக தயாராகி இருந்தது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் வரிசையாக விழுந்தது. பாலத்தில் வாகன போக்குவரத்து இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பாலம் இடிந்து விழுவதை அங்கிருந்த இளைஞர்கள் மொபைலில் வீடியோவாக எடுத்தனர். இதன் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சிக்டி தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் மூலம் பாலம் கட்டுவதற்காக டெண்டர் எடுத்த நிறுவன உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S Sivakumar
ஜூன் 19, 2024 06:56

இன்றைய நிலவரப்படி நாட்டில் முன்னேற்றத்திற்கு புதிய பணிகளில் தரக்குறைவான முறையில் செய்யப்பட்ட காரணத்தை அறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் உண்மையான வேலைகள் செய்வதை ஏமாளிகள் போல சித்தரித்து விடுவார்கள்


D.Ambujavalli
ஜூன் 19, 2024 06:06

ஒப்பந்ததாரருக்கு பில் செட்டில் ஆகிவிட்டதா ? கமிஷன் பேசியபடி மேலிருந்து கீழ்வரை கிடைத்துவிட்டதா? அவ்வளவுதான் ‘மேற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே ‘ என்ற கதைதான்


தாமரை மலர்கிறது
ஜூன் 18, 2024 23:26

பிஹாரில் ராம் தேஜஸ்வியுடன் நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்தபோது கட்டப்பட்ட பாலம். நிதிஷிற்கு தெரியாமல் ராம் தேஜஸ்வி பாலத்திற்கான பணத்தை கொள்ளையடித்ததன் விளைவு இப்போது தான் பீகார் மக்களுக்கு புரிகிறது. ராம் தேஜஸ்வி லாலுவின் மகன் என்பதை நிரூபித்துவிட்டார். தேஜஸ்வியின் அட்டூழியம் தாங்கமுடியாமல் தான் நிதிஷ் பிஜேபியுடன் கூட்டணி வைத்துவிட்டார்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 19, 2024 15:57

அதென்னங்க நிதிஷ் ஆர்ஜெடி லாலுவின் கட்சி உடன் சேர்ந்தால்தான் ஊழல் செய்வாரா ???? பாஜக வுடன் சேர்ந்தால் செய்யமாட்டாரா ???? யோக்கியர் ஆகிவிடுவாரா ????


Anantharaman Srinivasan
ஜூன் 18, 2024 20:49

கமிஷன் 50% லாபம் 30% போக கட்டுமான பணி ௨௦%.. திறப்பதற்கு முன் இடிந்ததால் உயிர் சேதம் இல்லை.


Ramesh Sargam
ஜூன் 18, 2024 20:33

அப்படியா? கலவலைப்படாதீர்கள், அடுத்தமுறை ரூ. 24 கோடியில் பாலம் கட்டுவோம். அது திருப்பு விழாவிற்கு பிறகு விழும்படியாக உறுதியாக கட்டுவோம். இது உறுதி.


sankaranarayanan
ஜூன் 18, 2024 20:12

பீஹாரில் நதிகளின் மீது கட்டிய பாலம் இடிந்து விழுவது சகஜமாக போயிடுச்சு முன்பே ஒரு நதியின் குறுக்கே கட்டப்பட்ட பெரிய பாலம் கட்டிய உடனே சில மாதங்களில் இடிந்து விழுந்தது இது போன்ற நடவடிக்கைகள் பீஹாரில் அதிகம் நடந்து மக்கள் பணம் தண்ணீரில் வீணாகிறது இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? இனியாவது ஒரு நடவடிக்கை எடுத்து உத்திரவாதத்தவுடன் கட்டுமாறு அரசு கான்ட்ராக்டர்களை அறிவுறுத்துமா இல்லை இனியும் தொடருமா?


Kannan Soundarapandian
ஜூன் 18, 2024 19:52

பாலம் கட்டும் பணியில் ஊழல். கலிகாலம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ