உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போன் பே மூலம் பஸ் டிக்கெட்: அறிமுகப்படுத்த அரசு திட்டம்

போன் பே மூலம் பஸ் டிக்கெட்: அறிமுகப்படுத்த அரசு திட்டம்

பெங்களூரு: கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் போன் பே மூலம், டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.இன்றைய நவீன காலகட்டத்தில், கடைக்கு செல்பவர்கள் கையில் பணம் எடுத்து செல்வதில்லை. போன் பே, கூகுள் பே, பே.டி.எம் மூலம் பணம் செலுத்துகின்றனர். ரயில் டிக்கெட் எடுக்க கூட ஸ்கேன் செய்து பணம் செலுத்துகின்றனர்.இந்நிலையில் கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக அரசு சாலை போக்குவரத்து கழக பஸ்களிலும், போன் பே, கூகுள் பே, பே.டி.எம்., மூலம், டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டால் கண்டக்டர், பயணியர் இடையிலான சில்லறை பிரச்சனை நீங்கும். போனில் பணம் செலுத்துவதன் மூலம், டிக்கெட் தொலைந்தாலும் பயணியருக்கு கவலை இல்லை. பி.எம்.டி. சி., வால்வோ பஸ்களில், போன் பே, கூகுள் பே, பே.டி.எம்., மூலம், டிக்கெட் எடுக்கும் வசதி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி