உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிமன்றங்களை கோவில் என்று சொல்வது ஆபத்து: தலைமை நீதிபதி

நீதிமன்றங்களை கோவில் என்று சொல்வது ஆபத்து: தலைமை நீதிபதி

கோல்கட்டா: ''நீதிமன்றங்களை மக்கள், கோவில் என்று சொல்வது, நீதிபதிகள் அதன் கடவுளாக நினைத்துக் கொள்ளும் பெரிய ஆபத்தை உருவாக்கி விடுகிறது, என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டார்.தேசிய நீதித்துறை அகாடமியின் மண்டல மாநாடு, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் நேற்று நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:'யுவர் ஹானர், லார்ட்ஷிப், லேடிஷிப்' என்று நீதிபதிகளை குறிப்பிடுகின்றனர். சில நேரங்களில் மக்கள் நீதிமன்றங்களை, நீதியின் கோவிலாக குறிப்பிடுகின்றனர். இது மிகப் பெரும் ஆபத்து. அப்படி பார்த்தால், நாங்கள் அந்தக் கோவிலின் கடவுள்களாக நினைத்துக் கொள்ளும் அபாயத்தை உருவாக்கிவிடும்.நீதிமன்றங்களும், நீதிபதிகளும், மக்களுக்கு சேவையாற்றுகின்றனர். அவ்வாறு மக்களை சேவையாற்றுவதாக நினைக்கும்போது, பரிவு, பச்சாதாபம் உள்ளிட்டவற்றுடன் நீதிமன்றங்கள் வழக்கை பார்க்க முடியும். குற்றவாளியாக இருந்தாலும், தண்டனை வழங்கும் போது, மனிதத்தன்மையை கையாள வேண்டும். அவரும் ஒரு மனிதர் தானே என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்.அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்தும் உயரிய கடமையுடன் இது இணைந்திருக்க வேண்டும்.இது, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமல்ல, மாவட்ட அளவிலான நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். ஏனெனில், மக்கள் முதலில் உங்களிடம் தான் வருகின்றனர்.மொழி ஒரு தடையாக மக்களுக்கு இருக்கக் கூடாது. இந்த நோக்கத்துடன்தான் நீதிமன்ற தீர்ப்புகளை, மக்களுக்கு அவர்களுடைய மொழியில் மொழிபெயர்த்து வழங்கும் திட்டத்தை துவக்கினோம். அதிகளவில் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Chand
ஜூன் 30, 2024 15:47

இது வரை தலைமை நீதிபதி பார்த்தது கிடையாது


swega
ஜூன் 30, 2024 14:20

நீதிமன்றம் ஒரு கோவில். சந்திரசூட் உட்படஅனைத்து நீதிபதிகள் இதை மறந்து தீர்ப்பு வழங்குகிறார்கள். தவறான தீரப்புகள் வழங்கும் நீதிபதிகள் தண்டிக்க பட வேண்டும்.


duruvasar
ஜூன் 30, 2024 10:00

மம்தா நீதிமன்றங்கள் கோவில் என கூறியது ஓசியில் பொங்கலும் சுண்டலும் கிடைக்கும் என்ற நினைப்பில் தான். அதிலும் தலைமை நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கி விட்டார்.


Tetra
ஜூன் 30, 2024 07:37

கோவில் என்று சொல்வது நேர்மையான பாகுபாடு இல்லாத தீர்ப்புக்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். தலைமை நீதிபதி சொல்வது சரியே.


venkatakrishna
ஜூன் 30, 2024 06:58

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நீதித்துறையின் மாண்பு, செயல்பாடு, தற்போதுள்ள நீதித்துறையின் செயல்பாடு ஆகியவை மாயமான முறையில் விருப்பு, வெறுப்பின்றி ஆய்வுகள் மேற்கொண்டால் நாடு எந்தளவுக்கு சீர் கெட்டிருக்கிறது என்பது விளங்கும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை