உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா?: எலான் மஸ்க், முன்னாள் மத்திய அமைச்சர் இடையே விவாதம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா?: எலான் மஸ்க், முன்னாள் மத்திய அமைச்சர் இடையே விவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது' என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

கேள்வி: '' மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது ஏ.ஐ., மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறிதாக இருந்தாலும் மிக அதிகமாக உள்ளது'' என எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

பதில்

இதற்கு பதில் அளித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சேகர் வெளியிட்டுள்ள பதிவு: பாதுகாப்பான டிஜிட்டல் வன்பொருளை யாராலும் உருவாக்க முடியாது என எலான் மஸ்க் கூறுகிறார். இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் பதிலடி

இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதற்கு, ''எதையும் ஹேக் செய்யலாம்'' என எலான் மஸ்க் பதில் அளித்தார்.

பதில்

இதற்கு பதில் அளித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சேகர் வெளியிட்டுள்ள பதிவு: மின்னணு சாதனங்களை ஹேக் செய்ய முடியும் என்றாலும் இந்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை. இதனை புளூடூத், வைபை மூலம் இணைக்க முடியாது. இவ்வாறு ராஜிவ் சேகர் பதில் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Nagercoil Suresh
ஜூன் 17, 2024 07:18

இந்த இவிஎம் மெஷின் ஒரு குழந்தைக்கு வாங்கி கொடுக்கும் சாதாரண பொம்மை கால்குலேட்டர் போலுள்ளது தான், இது ஒண்னும் பெரிய ப்ரோக்ராம் கிடையாது, தனியாக நின்று இயங்கக்கூடியது அவ்வ்ளவு தான். தேவைப்பட்டால் வேறு கருவிகளை தேவைக்கேற்ப தேவைப்படும் மெஷின்களில் மறைத்துவைத்துகொண்டு இயக்கலாம் அல்லது பல லட்ச மெஷின்களில் குறிப்பிட்டவற்றில் மட்டும் வாக்குகளை முதலிலே போட்டு வைத்துக்கொண்டு தேவைப்படும் பூத்துகளில் தேர்தல் கமிஷன் நினைத்தால் சேர்க்கலாம், அதன் பிறகு சதவீதத்தை கூட்டி களித்து கூற முடியும், அதிக பட்ச்சமாக பதிவாகும் வாக்கு சதவீதத்தில் 5 சதவீத வாக்குகளை சேர்க்கலாம் அதற்கு மேல் வளர்ந்த மாநிலங்களில் சேர்ப்பது மிகவும் கடினம், காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த மிக மோசமான உதவாக்கரை திட்டம் இது, இதை தூக்கி குப்பையில் போடுவதே நாட்டின் எதிர்காலத்திற்கு உதவும், எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட சதவீதத்திற்கும் மேல் மக்கள் சக்தி தான் பெரிது அதுவே மகேசன் சக்தி....


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 18, 2024 02:11

தேர்தல் கமிஷன் அழைத்தபோது அய்யா தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? அப்போ அங்கே பொய் நிரூபித்து இருக்கலாமே.


ராம்சிங்
ஜூன் 16, 2024 20:42

ஒருத்தர் அறிவாளி. இன்னொருத்தர் வெட்டி.


N Srinivasan
ஜூன் 16, 2024 20:35

இந்தியா வந்து தொழில் தொடங்கு இல்லாவிடில் வாயை மூடிட்டு போ உனக்குதான் எல்லாம் தெரியும் என்று பேசாதே இங்கே பேச நிறைய மக்கள் இருக்கிறார்கள்


N Srinivasan
ஜூன் 16, 2024 20:33

ஒரு வேளை மக்களுக்கு பில்லி சூனியம் வைப்பது போல இதற்கும் வைக்கலாம் என்று சொல்லுகிறாரோ.


venugopal s
ஜூன் 16, 2024 20:07

எலான் மஸ்கிடம் சற்று எச்சரிக்கையாக பேசுங்கள், அப்புறம் நம்முடைய இ வி எம் மெஷின்களை ஹேக் செய்து காட்டி விடப் போகிறார்!


Krishna
ஜூன் 16, 2024 20:03

எலன் மாஸ்க் மின்னணு இயந்திரத்தை பற்றி தெரியாமல் பேசுகிறார். இது நெட்டோடு தொடர்பு இல்லை


M S RAGHUNATHAN
ஜூன் 16, 2024 19:18

ஒரு அமெரிக்க குடிமகனுக்கு தேவை இல்லாத விஷயம். இந்தியாவுடன் அவர் தொழில் சம்பந்த உறவு மட்டும் கொண்டால் போதும். அவரால் முடிந்தால் மற்றும் ஒருமுறை சிப்பல், சிங்வி, பூஷன் ஆகியோரை வைத்து மின்னணு வாக்கு இயந்திரத்தை Hack செய்து உச்ச நீதிமன்றத்திற்கு காட்டவும்.


என்றும் இந்தியன்
ஜூன் 16, 2024 18:42

இன்டர்நெட் என்றால் அதில் எவர் வேண்டுமானாலும் புகுந்து விளையாட முடியும். ஆனால் EVM என்பது ஒரு கால்குலேட்டர் மாதிரி 4 அழுத்தினால் 4 என்றே காண்பிக்கும் ஆனால் அந்த சிப்பில் 4 என்றால் 7, 1 என்றால் 3 என்று.......இருந்தால் அது தான் காண்பிக்கும். நீங்கள் அழுத்தின எண் அதுவோ அதற்குத்தகுந்த ஓலைப்பத்திரம் அந்த குறியோடு பார்த்திருப்பீர்களே. அதற்கு மீறி ஒன்றும் பண்ண முடியாது. இல்லை கூட்டலில் குளறுபடி பண்ணலாம் , அதற்கும் மேலே சொன்ன விதிமுறை தான் கூட்டினால் கழித்தல் என்று காண்பி ன்று சிப்பில் கோல்மால் செய்திருந்தால் அப்படித்தான் நடக்கும். ஆகவே chip கோளாறு என்றால் எல்லா தகிடுதத்தம் செய்ய முடியும். உளறாதே எலான் மாஸ்க்


Balasubramanian
ஜூன் 16, 2024 18:35

உச்ச நீதிமன்றம் வரை போராடி பார்த்து விட்டார்கள்! தேர்தல் முடிவுகளையும் பார்த்து விட்டார்கள் - முடியவில்லை! அன்னியர் தயவை நாடி உள்ளார்கள்! எப்படியாவது ஹேக் செய்தாவது ஜெயிக்க ஆசை ! இவர்களா ஜனநாயகத்தை காக்க போராடுகிறவர்கள்?


saravanan
ஜூன் 16, 2024 18:31

Any technology can be hacked.


Krishna
ஜூன் 16, 2024 20:09

அப்படி என்றொல் காகித வோட்டையூம் ஹாக் செய்யலாம் முன்பு எப்படி கள்ள வோட்டு போட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை