மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்
2 hour(s) ago
ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் வழங்கல்
2 hour(s) ago
சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்
2 hour(s) ago
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
2 hour(s) ago
புதுடில்லி : 'அலுவலகத்திற்கு தாமதமாக வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, இனி அரை நாள் விடுப்பு கழிக்கப்படும்' என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.நாடு முழுதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு, காலை 9:00 முதல் மாலை 5:30 வரை பணி நேரம். ஆனால் பெரும்பாலானோர் குறித்த நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவ தில்லை என்ற புகார் உள்ளது. குறிப்பாக பொது மக்களுக்கு சேவை வழங்கும் வங்கி, தபால் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்த பிரச்னை உள்ளது.இந்நிலையில் மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை பணி நேரம் தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்கள், உயரதிகாரிகள் அனைவரும் தினமும் குறித்த நேரத்திற்குள் அலுவலகம் வர வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அதிகபட்சம் 15 நிமிடம் சலுகை நேரம் வழங்கப்படும். இதன்படி காலை 9:15 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஏதாவது காரணத்தால் 9:15 மணிக்குள் அலுவலகம் வர முடியவில்லை எனில், அது குறித்து முன் கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். மேலும் தாமத்திற்காக அரை நாள் விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கொரோனா சமயத்தில் நிறுத்தப்பட்ட பயோமெட்ரிக் பதிவை பல அலுவலகங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. இனி அனைத்து ஊழியர்களும் ஆதார் உடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவில் வருகையை குறிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago