உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொபைல் கட்டணம் உயர்வு மத்திய அரசு விளக்கம்

மொபைல் கட்டணம் உயர்வு மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி : சந்தை நிலவரத்தை பொறுத்து, 'டிராய்' ஒப்புதலுடன் தான் மொபைல் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உலகளவில், இப்போதும் மிகவும் குறைவான கட்டணமே நம் நா ட்டில் உள்ளது என, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.மொபைல் சேவை வழங்கும் மூன்று தனியார் நிறுவனங்களான, 'ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா' ஆகியவை தங்களுடைய கட்டணத்தை சமீபத்தில் உயர்த்தின. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தன்னிச்சையாக இந்த நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதை மத்திய அரசு ஏன் கட்டுப்படுத்தவில்லை என, கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள், டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. சந்தை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அதே நேரத்தில் பயனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணங்கள் நிர்ணயிப்பதை டிராய் கண்காணித்து வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் சேவை கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. மேலும், '5ஜி, 6ஜி' என பல புதியதொழில்நுட்ப வசதிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான செலவுகளை ஈடுசெய்ய, கட்டணங்களை உயர்த்த நிறுவனங்கள் கோரின.அதை ஆய்வு செய்து, டிராய் அளித்த ஒப்புதலின்படியே, கட்டண உயர்வை அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த மூன்று தனியார் நிறுவனங்கள் மற்றும் ஒரு பொதுத் துறை நிறுவனம் ஆகியவை, நம் நாட்டில் மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. இவை, உலகிலேயே இந்தியாவில் தான் மிகவும் குறைவான கட்டணம் இருப்பதை உறுதி செய்து வருகின்றன. ஆனால், கட்டண உயர்வு தொடர்பாக, பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

R S BALA
ஜூலை 10, 2024 17:14

EB பில் GAS பில் போன் பில் ஸ்கூல் பில் பெட்ரோல் பில் மளிகை பில்...இப்படி பலபில்ஸ் அப்பா போதும்டா சாமி கும்பஸ்தன் நிலைமை..


Swaminathan L
ஜூலை 10, 2024 12:37

பல்லாயிரம் கோடிகள் லைசன்ஸ் மற்றும் கட்டமைப்புச் செலவு செய்து விலையேற்றம் செய்யாமல் சேவை தர அந்நிறுவனங்கள் என்ன ட்ரஸ்ட் அமைப்பா? ஆரம்பத்தில் ஒரு நிமிடத்திற்கு எத்தனை ரூபாய்கள் இன்கமிங், அவுட் கோயிங் கால்களுக்குச் செலவிட்டோம் என்று நினைவில்லை போலும்


pattikkaattaan
ஜூலை 07, 2024 18:13

ஒரு வீட்டில் நான்கு உறுப்பினர்கள் இருந்தால் குறைந்தது ஆயிரம் ரூபாய் இதற்கு செலவு செய்யவேண்டும். வயதானவர்கள் நிலை இன்னும் மோசம். இதில் பிரட்சனை என்னவென்றால் உபயாேகப்படுத்தாவிட்டாலும் தினமும் கட்டணம் உண்டு. மது விலை உயர்ந்தால் குடிப்பவனுக்கு மட்டுமே பிரச்சனை. இது மக்கள் எல்லாருக்கும் அதிக செலவு. வேண்டாம் என்று விடவும் முடியாது.


Barakat Ali
ஜூலை 07, 2024 15:23

மொபைல் கட்டண உயர்வு மட்டும்தான் மக்களைப் பாதிக்கிறதா ????


ganeshkumar263
ஜூலை 07, 2024 15:16

அரசு நிறுவனமான BSNL என்னெ ய்து கொண்டிருக்கிறது குறைந்தது 4 கி ஸ்பீடாவது தரலாமே மக்கள் இந்த jio மாறுவார்கள்


Ramamurthy N
ஜூலை 07, 2024 15:15

கட்டணம் விலைவாசிக்கு ஏற்ப உயர்த்துவதில் தவறில்லை ஆனால் வீட்டு உள்ளேயும் சிக்னல் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். நகர்புரத்திலேயே ஒழுங்காக கிடைக்காதபோது இன்னும் கிராமங்களில் என்ன நிலைமையோ?


RAAJ68
ஜூலை 07, 2024 12:06

தனியார் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் வருடா வருடம் கட்டணத்தை உயர்த்தி நடுத்தர மக்களை வறுத்து எடுக்கிறது. எல் கே ஜி அட்மிஷனுக்கு லட்சம் ரூபாய் கேட்கிறான். அரசாங்கமும் கல்விக்கூடங்களில் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது . இதைப் பற்றி யாராவது கண்டு கொள்கிறீர்களா? போர் கொடி உயர்த்துகிறீர்களா எதுவும் கிடையாது இதற்கும் யாராவது கூப்பாடு போடுங்களேன்.


இவன்
ஜூலை 07, 2024 11:13

உடம்பு வியாற்க கூடாது, எல்லாம் ஓசி ல வேணும


RAAJ68
ஜூலை 07, 2024 09:39

பங்குச்சந்தையில் 50 ஆயிரம் போட்டேன் அது இப்போது இரண்டு லட்சமாக ஆகி உள்ளது. மலிவான விலையில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கினேன் நான்கு வருடங்களுக்கு முன்பு அது இப்போது பலமடங்கு உயர்ந்துள்ளது . சென்ற வருடம் மாதாந்திர சம்பளத்தை விட இந்த வருடம் 15 சதவீதம் அதிகரித்துக் கொடுத்துள்ளனர் என்றெல்லாம் நாம் நமக்கு சாதகமான விஷயங்களை பேசி வருகிறோம் இன்னும் கூடுதலாக மதிப்பு உயருமா என்று தினம் தினம் விசாரிக்கிறோம் ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு தொலைபேசி கட்டணத்தை சிறிதளவு உயர்த்தியதற்கு கூப்பாடு போடுகிறோம். Free data கொடுத்ததில் இருந்து இரவு முழுக்க பேசுகிறார்கள் படம் பார்க்கிறார்கள் கொட்டம் அடிக்கிறார்கள். இதெல்லாம் இனிக்கிறதா.


Gnanam
ஜூலை 07, 2024 10:47

சவூதி 400 சில்லறை 1GB


M Ramachandran
ஜூலை 07, 2024 09:26

அயல்நாட்டுடன் ஒப்பிடுவது தவறு. நம்முடைய பணமதிப்பிற்கும் முன்னேரிய நாடுகளின் பணமதிப்பும் ஒன்றல்ல. அங்கு ஒரு வேலைய்யக்கு சம்பளம் நிர்ணயிக்கும் போது இங்கு அதே சம்பளம் நிணயிப்பீர்களா? மக்களை அவ்வளவு எளிதாகா ஏமாற்ற முடியாது . நம் நாட்டில் 10 கிலோ அரசி ரூபாய் 650 என்றால் அயலநாட்டில் அது டாலர் கணக்கிலான அல்லதுபவுண்டு கணக்கிலோ விலை நிணயிக்க படுகிறது . பார்த்தால் அதிகம் என்றால் இங்கும் அரசி விலையை உயர்த்த சொல்வீர்களா? அது ஞ்யமா?


R. NAGARAJ THENI KALPAKKAM
ஜூலை 07, 2024 13:57

ஓசியில் தரலாமா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி