மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
49 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
புதுடில்லி:சர்வதேச பயணியருக்கு விமான பயணத்தை எளிமையாக்கும் வகையில், டில்லி மெட்ரோவுடன் ஏர் இந்தியா நிறுவனம் கைகோர்த்துள்ளது.சர்வதேச பயணியருக்கு விமான நிலையங்களில் சோதனை நீண்ட நேரம் ஆகும். இதற்காக விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே வர வேண்டியிருக்கும். நீண்ட வரிசை வேறு. இதனால் பெரும்பாலானோர் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதைத்தவிர்க்கும் வாய்ப்பை ஏர் இந்தியா நிறுவனம் சர்வதேச பயணியருக்கு வழங்கியுள்ளது. இதற்காக விமான நிலையத்தின் அனுமதியுடன் டில்லி மெட்ரோவுடன் கைகோர்த்துள்ளது.அதன்படி, புதுடில்லி, சிவாஜி ஸ்டேடியம் ஆகிய இரு மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதி தற்போது உள்நாட்டு பயணியருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த நிலையில், சர்வதேச பயணியருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இந்த இரு ரயில் நிலையங்களிலும் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை 'செக்-இன்' செய்ய விமான பயணியருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.உள்நாட்டு விமானம் புறப்படுவதற்கு 12 முதல் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவும் சர்வதேச விமானம் புறப்படுவதற்கு நான்கு முதல் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவும் 'செக்-இன்' செய்ய பயணியர் அனுமதிக்கப்படுவர்.
49 minutes ago
1 hour(s) ago