உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ் கட்டணம் உயர்த்தப்படாது முதல்வர் உறுதி

பஸ் கட்டணம் உயர்த்தப்படாது முதல்வர் உறுதி

பல்லாரி: பல்லாரியில், நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:பஸ் கட்டணத்தை உயர்த்தும் ஆலோசனை, அரசிடம் இல்லை. நடப்பாண்டு வாக்குறுதி திட்டங்களுக்காக, 60,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களால், மாநிலம் மேலும் வளர்ச்சி அடையும்.துங்கபத்ரா அணையில் மண் நிரம்பியுள்ளது. இதை அப்புறப்படுத்துவது கஷ்டம். எனவே கொப்பாலின், நவலி அருகில் துங்கபத்ராவுக்கு சமமான அணை கட்டுவது தொடர்பாக, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களுடன் பேச்சு நடத்தி, அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவக்க அங்கன்வாடி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்வித்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, பிரச்னைக்கு தீர்வு காணப்படும். பெட்ரோல், டீசல் விலையை உயர்வு மாநில முன்னேற்றத்துக்காக தானே தவிர, வாக்குறுதி திட்டங்களுக்காக அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை