உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலச்சரிவு பகுதியில் முதல்வர் ஆய்வு

நிலச்சரிவு பகுதியில் முதல்வர் ஆய்வு

குடகு : பொன்னம்பேட்டின், ஸ்ரீமங்களாகுட்டாவில் நிலச்சரிவு நடந்த இடத்தை, முதல்வர் சித்தராமையா நேற்று ஆய்வு செய்தார்.குடகு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் இடிந்தன. விளைச்சல் சேதமடைந்தது. பொன்னம்பேட்டின், ஸ்ரீமங்களாகுட்டாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.முதல்வர் சித்தராமையா, நேற்று ஸ்ரீமங்களாகுட்டாவுக்கு வந்து, நிலச்சரிவை பார்வையிட்டார். அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.“நிலச்சரிவால் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வெளியுலக தொடர்பை இழந்துள்ளன. அங்கு தொங்கு பாலம் கட்டுவதுடன், அவசரப் பணிகள் மேற்கொண்டு சாலை அமையுங்கள்,” என, அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.அரசு தலைமைச் செயலர் ஷாலினி ரஜ்னீஷ், பாதுகாப்பு பணிகள் குறித்து முதல்வரிடம் விவரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ