உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்றங்களை தடுக்க கமிஷனர் அறிவுரை

குற்றங்களை தடுக்க கமிஷனர் அறிவுரை

பெங்களூரு: ''நகரில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதில் பொதுமக்களின் பங்கும் உள்ளது,'' என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்த் அறிவுறுத்தினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரில் குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள, பொது மக்களும் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும். இந்த விஷயத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.சிலர் குடும்பத்துடன் வெளியே செல்லும் போது, வீட்டை பூட்டி சாவியை எடுத்து செல்வதில்லை. மாறாக செருப்பு ஸ்டாண்ட், பூந்தொட்டியின் கீழ், ஜன்னல் என, மறைத்து வைக்கின்றனர். இது சரியல்ல. வீட்டை நோட்டம் விட்டு, திருடுவது அதிகரிக்கிறது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வீட்டை பூட்டிவிட்டு சாவியை, பாதுகாப்பாக உடன் கொண்டு செல்வது அவசியம்.சமீப நாட்களாக விலை உயர்ந்த ஷூக்கள், செருப்புகள் திருடுவதும் பெங்களூரில் அதிகரிக்கிறது. விலை உயர்ந்த ஷூக்கள், செருப்புகளை வீட்டுக்குள் வைத்திருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ