உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் காங்., அரசு

சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் காங்., அரசு

மைசூரு: ''கர்நாடகாவில் சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வகையில் காங்கிரஸ் ஆட்சி செயல்படுகிறது,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.மைசூரில் நேற்று நடந்த தெற்கு ஆசிரியர் தொகுதி பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர் விவேகானந்தனுக்கு ஆதரவாக வந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயேந்திரா பேசியதாவது:கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும், வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்து உள்ளது. சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வகையில் செயல்படுகின்றனர். விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்புகின்றனர். லோக்சபா தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. வேட்பாளர் விவேகானந்தன் வெற்றிக்காக இரு கட்சியினரும் உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மேலவை தேர்தல் தொடர்பாக, மைசூரில் நடந்த கூட்டத்தில் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAVINDIRAN B
மே 27, 2024 13:49

காங்கிரஸின் மறு முகம் தான்


Ganesun Iyer
மே 27, 2024 13:44

யாருக்கு..


தஞ்சை மன்னர்
மே 27, 2024 10:36

நீங்க பெருமான்மை ஹிந்துக்களுக்கே விரோதிகளாச்சே அதுக்கு என்ன சொல்ல போறீங்க


மேலும் செய்திகள்







புதிய வீடியோ