உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரிதிப்பே கவுடாவுக்கு ஆதரவு காங்., மகளிர் தலைவி அழைப்பு

மரிதிப்பே கவுடாவுக்கு ஆதரவு காங்., மகளிர் தலைவி அழைப்பு

மைசூரு: ''ஆசிரியர்களின் பிரச்னையை தீர்க்க காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது. கட்சியின் வேட்பாளர் மரிதிப்பே கவுடாவை வெற்றி பெற செய்யுங்கள்,'' என மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்பா வலியுறுத்தி உள்ளார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம்.ஆசிரியர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு அவர்களுடன் போராடி உள்ளேன். ஆசிரியர்களின் வசதிகள் தொடர்பாக குமார் நாயக்கா கமிட்டி சமர்ப்பித்த அறிக்கை அமல்படுத்தப்படும்.ஆசிரியர்களின் பிரச்னையை தீர்க்க காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது. நான்கு முறை தெற்கு ஆசிரியர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மரிதிப்பே கவுடாவை, ஐந்தாவது முறையாக வெற்றி பெற செய்யுங்கள்.அவர், ஆசிரியர்களின் நலனுக்காக போராடி உள்ளார். இம்முறை காங்கிரஸ் அதிக பலத்துடன் உள்ளது. எனவே, ஆசிரியர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும். எனவே, கட்சியின் வேட்பாளர் மரிதிப்பே கவுடாவை வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை