மேலும் செய்திகள்
பெரும் தவறு!
6 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
6 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
6 hour(s) ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
7 hour(s) ago | 6
சிக்கபல்லாபூர், - சிக்கபல்லாபூர் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும், முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ரெட்டியை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதி காங்கிரஸ் சீட்டை முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ரெட்டி எதிர்பார்த்தனர். ஆனால், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரக் ஷா ராமையாவுக்கு, மேலிடம் கொடுத்து உள்ளது. இதனால் வீரப்ப மொய்லி, சிவசங்கர் ரெட்டி அதிருப்தியில் உள்ளனர்.ரக் ஷா ராமையாவின் தந்தை சீதாராம், சமாதானப்படுத்த முயன்றும், அவர்கள் இருவரும் சமாதானம் ஆகவில்லை.இந்நிலையில், ரக் ஷா ராமையா வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போதும், அதில் பங்கேற்காமல் இருவரும் புறக்கணித்தனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டோம் என்று, நண்பர்களிடம், இருவரும் கூறி உள்ளனர். இதனால் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த, காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago | 1
6 hour(s) ago
7 hour(s) ago | 6