உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு

காங்கிரசுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நடந்து வரும் லோக்சபா தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம்' என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஆங்கில மீடியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பா.ஜ., 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். இதில் பா.ஜ., 240 முதல் 260 தொகுதிகளிலும் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியானது 35 முதல் 45 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவார்.

சந்தேகம்

கிழக்கு மற்றும் தெற்கில் கூடுதலாக 20 முதல் 25 தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றும். நடந்து வரும் லோக்சபா தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம். காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது.

முன்னேற்றம்

கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட கூடுதலாக வெற்றி பெறுவார்களா என்பது குறித்து எந்த வித யோசனையும் எனக்கு இல்லை. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை. காங்கிரஸ் இந்த தேர்தலில் 65, 68, 72 அல்லது 55 தொகுதிகளில் வெற்றி பெறுவார்களா? என்பது எனக்கு தேவையற்ற விஷயம். 55 தொகுதிகளில் இருந்து 65 அல்லது 68 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பது என்பது பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்?. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார். 2014ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் 44 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.2019ம் ஆண்டில், நடந்த தேர்தலில் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Senthoora
மே 28, 2024 21:18

இவருக்கு அரசியல் பகுத்தறிவு இல்லையே.


INDIAN Kumar
மே 28, 2024 17:34

எல்லாம் வல்ல இறைவன் நல்ல தீர்ப்பை கொடுப்பார் பொறுத்திருங்கள் ஒரு வாரம் மட்டும்


INDIAN Kumar
மே 28, 2024 17:33

அவரவர் விருப்பம் வெளிப்படுகிறது எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும் யார் பிரதமர் ஆவார் என்று எல்லாம் இறை செயல் அவனின்றி அணுவும் அசையாது..


spr
மே 28, 2024 12:25

"மத்தியில் கூட்டாட்சி என்ற அளவில் வெற்றி பெற்றால், நாடு நாசமாகப் போகும்" என்பதில் சந்தேகமேயில்லை கூட்டாட்சியில் அவரவர் ஆதாயத்திற்காக நாட்டை ஏலம் விடுவார்கள். அறுதிப் பெரும்பான்மையுடன் மோடி சர்வாதிகாரியாக இருப்பது சில விஷயங்களில் நாட்டுக்கு நல்லதே நல்ல ஆட்சியென்பது அவசியமே ஆனால் ஒரு நல்ல ஆட்சி அமைய நாடு முன்னேற கருத்து சுதந்திரம், மனித நேயம் என்பதெல்லாம் கூட சில நேரங்களில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.


Nagarajan D
மே 28, 2024 19:00

அப்படி ஒரு சூழல் வந்தால் மோடி பிரதமராக மாட்டார்... கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி நாட்டிற்கு கேடு


doss
மே 27, 2024 20:40

பாஜாகாவுக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது.அடுத்த மாதம் 4 ம் தேதி தெரிய வரும்


doss
மே 27, 2024 20:38

இந்த தகவலைத்தான் தேர்தல் ஆரம்பிக்குமுன் பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் அவர்கள் கூறினார்கள்.அமித்ஷாவும் கூறினார்கள்.இவி எம் எப்படி செயல்படவைக்கப்பட்டுள்ளதோ?.பார்ப்போம் ஜுன் 4 தேதி.


Mani . V
மே 27, 2024 16:54

பாஜக: இதுக்குதான் நாங்க EVM வேணுமுன்னு அடம் பிடிக்கிறோம்.


Paramasivam Ravindran
மே 27, 2024 15:20

இவர் சந்தர்ப்பவாதி. பிஜேபி யில் சேர்ந்தவுடன், இப்படி பேசுகிறார். காங்கிரஸில் காசு கொடுத்து சேர்த்துக் கொண்டதால், பிஜேபி 100 தொகுதியில் வருவதே கஷ்டம் என்பார்.


N.Arumugam
மே 27, 2024 14:31

எப்படி இருப்பினும் 272 ஐ தனியாக எந்த கட்சியும் பெற வாய்ப்பில்லை. வீக்கான எதிர்கட்சி அமைய இந்த முறை வாய்ப்பில்லை. அதிக சக்தி வாய்ந்த ஆளும் கட்சி தான் வளர ஜனநாயகத்தை நசுக்கும் வேலைகளில் இறங்கும். மத்தியில் கூட்டாட்சி என்ற அளவில் வெற்றி பெற்றால் தான் நாட்டுக்கு நல்லது.


Mahendran Puru
மே 27, 2024 14:15

கடமை வீரன். ஒரு விஷயம் , ஜூன் 4ல் தமிழ்நாட்டை விட்டு பாஜக காரனெல்லாம் காலி இல்லையா?


Kumar Kumzi
மே 28, 2024 08:25

எண்ணம் தவிடு பொடியாகும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை