உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓய்வு பெற்ற பொறியாளர் பணி நீட்டிப்பால் சர்ச்சை

ஓய்வு பெற்ற பொறியாளர் பணி நீட்டிப்பால் சர்ச்சை

பெங்களூரு: ஓய்வு பெறும் குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் பாலராஜுவுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கும்படி, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் வலியுறுத்தி உள்ளார்.குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் பாலராஜு, ஆகஸ்ட் 31ல் ஓய்வு பெறுகிறார். இவருக்கு செப்டம்பர் 1 முதல், இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, வீட்டு வசதித்துறை முதன்மை செயலருக்கு, அமைச்சர் ஜமீர் அகமது கான் கடிதம் எழுதியுள்ளார்.இதன்படி, தலைமை பொறியாளர் பதவியில், பாலராஜுவை இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நீட்டிப்பது தொடர்பாக, கோப்பு தயாரித்து முறைப்படி தன்னிடம் அனுப்பும்படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.முதல்வர் சித்தராமையா சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியபோது, 'வெவ்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு நியமிக்கக் கூடாது' என, உத்தரவிட்டார். ஆனால், அதை மீறி அமைச்சர் இத்தகைய உத்தரவை பிறப்பித்தது, சர்ச்சைக்கு காரணமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை