உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் இண்டெக்சேஷன் வாய்ப்பு திருத்தம் கொண்டு வர முடிவு

மீண்டும் இண்டெக்சேஷன் வாய்ப்பு திருத்தம் கொண்டு வர முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : நீண்ட கால ஆதாய வரி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த, 'இண்டெக்சேஷன்' வாய்ப்பு நீக்கத்தில் திருத்தத்தை கொண்டு வர இருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில், இண்டெக்சேஷன் பயன் நீக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். நீண்ட கால மூலதன ஆதாய வரியை எளிமைப்படுத்தும் விதமாக, இதை மேற்கொள்வதாக கூறியிருந்தார். ஆனால் இண்டெக்சேஷன் பயன் நீக்கப்பட்டதற்கு, பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, இந்த அறிவிப்பை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று லோக்சபாவில் இதற்கான முன்மொழிவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வர உள்ளார். இதன்படி, தற்போது 2024, ஜுலை 23 வரை சொத்து விற்பனை மூலம் கிடைத்த லாபத்திற்கு நீண்டகால ஆதாய வரி விகிதத்தை கணக்கிட, இண்டெக்சேஷன் முறையை தேர்வு செய்யாமல், 12.5 சதவீதம் வரி செலுத்தலாம். அல்லது இண்டெக்சேஷன் முறையை தேர்வு செய்வோர், மூலதன ஆதாய வரியாக 20 சதவீதம் செலுத்த வாய்ப்பு வழங்கப்படும். இரண்டில் ஏதேனும் ஒரு முறையில் வரி செலுத்த வாய்ப்பு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
ஆக 07, 2024 12:07

எத்தனை பேர் உண்மையான விற்பனை விலை/ லாபத்தை கணக்கில் காட்டுகிறார்கள்? பெரும்பாலும் பத்து சதவீத விலையில் பதிவு செய்து காட்டி அரசை ஏமாற்றுகிறார்கள்.. நீண்ட கால அளவில் 200 முதல் 3000 சதவீதத்துக்கு மேல் லாபமடைந்த குடிமகன் தனக்குக் கிடைத்த லாபத்தில் வெறும் 12 சதவீதம் வரி கட்ட அழுதால் அரசு நடத்த நிதி வேறு எங்கிருந்து கிடைக்கும்? வீடற்ற ஏழைகளிடமிருந்தா? இவர்கள் கட்டும் வரிப்பணத்தில்தான் பரம ஏழை மக்களுக்கு PM ஆவாஸ் திட்டத்தில் வீடுகள் கட்ட உதவ முடிகிறது.


Bala C
ஆக 07, 2024 10:39

இது நல்ல முடிவு. 12% வரி என்பது குறுகிய காலத்தில் விற்பவர்களுக்கு லாபம்


venugopal s
ஆக 07, 2024 10:22

இதற்குப் பெயர் தான் துக்ளக் ராஜ்யம்!


theruvasagan
ஆக 07, 2024 10:02

இன்னும் இந்த அரசு மத்திய வர்க்க மக்களின் இன்னல்களை புரிந்து கொள்ள மறுக்கிறது. இந்த முனைப்பை விலைவாசியை கட்டுப்படுத்தும் விஷயத்தில் காட்டுவதில்லை. சாமானிய மக்களை வரிகட்டும் இயந்திரகளாக மட்டுமே பார்க்கும் போக்கு துரதிருஷ்டவசமானது. இந்த போக்கு மாறாவிட்டால் இதனுடைய தாக்கம் வரப்போகும் மாநிலங்கள் தேர்தலில் எதிரொலிக்கும். அது மத்திய அரசுக்கு பின்னடைவை உண்டாக்கி நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிப்புக்குள்ளாக்கும்.


வாய்மையே வெல்லும்
ஆக 07, 2024 08:10

தேவை இல்லாத குரங்கை கையில் பிடித்தால் அது சும்மா விடாது என புரியவேண்டிய தருணம்


Velan Iyengaar
ஆக 07, 2024 08:10

மக்கள் விரோத பட்ஜெட் ... எதிர்ப்பினால் பல்டி இன்னும் பல மக்கள் விரோத அறிவிப்புகள் உள்ளன ......அவற்றையும் திரும்ப பெறுமா ஒன்றியம் ??? பல்டி ராஜா


sridhar
ஆக 07, 2024 10:28

ராஜாவை விட தேவலாம்.


M NARAYANAN
ஆக 07, 2024 07:59

நிதி அமைச்சர் நிதி அமைச்சக அதிகாரிகளின் விருப்பத்தை அதிகம் நிறைவேற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை அதிகம் செவிமடுப்பதில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதிகாரிகளின் விடு


அப்பாவி
ஆக 07, 2024 07:58

நிதியமைச்சரைச் சொல்லிக்.குத்தமில்லை. அங்கே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பியூரோக்ராட்டுகளுக்கு கள நிலவரம் தெரியாம இஷ்டத்துக்கு உருவலாம்னு ஸ்கெட்ச் போட்டுக் குடுத்ததால் வந்த வினை. இதுல அவிங்க டி.வி ல வந்து குத்த விகக்கம் தாங்க முடியல.


Velan Iyengaar
ஆக 07, 2024 08:35

புரியுது ... புரியுது .....


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 07:46

கொஞ்சம் சம்பாதித்தாலும் அவர்களை ஓட்டாண்டிகளாக ஆக்கிவிடுங்கள் ......


chennai sivakumar
ஆக 07, 2024 06:49

Somehow manipulate the calculations to fill up the coffers


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை