உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி உஷ்ஷ்ஷ்: அதானி என்ன பேசினார்?

டில்லி உஷ்ஷ்ஷ்: அதானி என்ன பேசினார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சமீபத்தில் சென்னை வந்திருந்தார், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி. 'இவர், சென்னையில் யார் யாரைச் சந்தித்தார்; முதல்வருடன் என்ன பேசினார்; முதல்வரின் குடும்ப உறுப்பினரிடம் என்ன பேசினார்?' என, காங்கிரஸ் தலைவர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விபரங்களை ராகுலிடம் சொல்லவே, இப்படி விசாரிப்பாம்.இன்னொரு பக்கம், ராகுல் அலுவலகத்தில் உள்ள சிலரும், அதானியின் சென்னை 'விசிட்' குறித்து விசாரித்து வருகின்றனராம். டில்லியில் உள்ள சில சீனியர் அதிகாரிகளும், தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இது தொடர்பான விபரங்களை கேட்டு வருகின்றனர்; ஆனால், அந்த தமிழக அதிகாரிகளோ, விபரங்களை பகிர்ந்து கொள்ள பயப்படுகின்றனர்.'சென்னைக்கு 14 பேருடன் வந்த அதானி, நான்கு மணி நேரம் தங்கி உள்ளார். முதல்வருடனும் அவர் ஆலோசனை நடத்தினார்; அத்துடன், முதல்வரின் குடும்பத்தில், 'பவர்புல்' ஆக இருக்கும் நபர் ஒருவருடனும் அதானி பேசினார்' என்கின்றனர்.இ.சி.ஆர்., சாலையில் உள்ள ஒரு பங்களாவில் தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாம்; அங்கு அதானிக்கு விருந்தும் அளிக்கப்பட்டது. 'முதல்வரின் அமெரிக்க பயணத்திற்கு முன் இந்த சந்திப்பு நடைபெற வேண்டும்' என, தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர் இந்த ஏற்பாட்டை செய்தாராம். 'தி.மு.க., சீனியர் எம்.பி.,யின் மகனும், தமிழக அமைச்சருமான அந்த நபர் தான் இந்த சந்திப்பிற்கு காரணம்' என்கின்றனர்.இந்த சந்திப்பு தொடர்பாக, பல விஷயங்கள் பேசப்பட்டாலும், 'தமிழகத்தில் அதானி அதிக அளவில் முதலீடு செய்வார்' என, பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ganesun Iyer
ஜூலை 18, 2024 15:33

அதானி அம்பானி மோடினு உருட்டிகிட்ருந்தீங்க, இப்போ அதானி -


Sankar ARUMUGAM
ஜூலை 14, 2024 13:31

தெலுங்கான முதல்வர் அதானிஇடம் மின்சாரம் வழங்கும் உரிமை படிப்படியாக வழங்க போகிறார். அதானியிடம் 2030ம் ஆண்டில் 80 ஜீ கா வாட் பவர் உற்பத்தி செய்யும் அளவுக்கு உள்ளார். மூன்று மாநிலத்துக்கு தேவையான மின்சாரம் அவரிடம் வரபோகிறது. போர்ட் அதட்கு வளர்ச்சி உள்ளது.


ராது
ஜூலை 14, 2024 08:12

ஸ்டாலினை பார்த்து இனி உபி கள் -அதான் நீ அதான் நீ என்று தலைவரை புகழ்வார்களோ


ராது
ஜூலை 14, 2024 08:11

படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா - பொருள் படைத்தவன் இருந்தானால் சபை மீறுமா - படித்தவன் படைத்தவன் யாராகிலும் பலம் போலீஸ் பலம் புடைத்திருந்த ஆல் அவனுக்கு இணையாகுமா - கோபாலா ஏன் சார் எங்கே போறே கோபாலபுரம் போரேன் ஏன் போறே ?????


N Sasikumar Yadhav
ஜூலை 14, 2024 03:06

ஊ...பிக்களின் நிலைமை ரொம்ப பாவம்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ