உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி வழங்கணும்; கார்கே வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி வழங்கணும்; கார்கே வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.கேரளாவில் வயநாட்டில் நிலச்சரிவுகளில் சிக்கி, இதுவரை 308 பேர் உயிரிழந்தனர். டில்லி, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில்,பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதி வழங்குங்கள்!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: காலநிலை மாற்றம் காரணமாக, நிலச்சரிவு, வேகவெடிப்பு , கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி பேரிடர் மேலாண்மை நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மேக வெடிப்பு மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், மக்களுடன் நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sankaranarayanan
ஆக 02, 2024 20:11

கொடுத்த 5000 கோடிக்கு சரியான கணக்கு கொடுத்தால்,திரும்பவும் பேரிடர் மேலாண்மை மேலும் மேலும் நிதி கொடுக்கும்.அங்கேதான் மவுனம் காக்கப்படுகிறதே


பேசும் தமிழன்
ஆக 02, 2024 19:09

நீங்கள் ஆட்சியில் இருந்த போது கொடுத்ததை விட... அதிகமாக தான் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.... அதனால் புதிதாக கம்பி கட்டும் வேலை பார்க்க வேண்டாம்.


தாமரை மலர்கிறது
ஆக 02, 2024 18:57

உத்திரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற ஏழை மாநிலங்களில் மாநில அரசுக்கே போதுமான பணம் இல்லாததால், அங்கு பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்கப்படுகிறது. தென்னக மாநிலங்களில் ஏற்கனவே செல்வம் கொழிக்கிறது. வளமான இடங்களில் மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த பணத்தை மாநில அரசே செலவு செய்ய முடியும் என்பதால் தான் கொடுப்பதில்லை. இருக்கின்ற பணத்தை எல்லாம் வளமாக உள்ள பகுதிக்கு செலவு செய்துவிட்டால், மத்திய அரசு எப்படி தொழில்துறைக்கு கடன் கொடுக்க முடியும்? தொழிற்துறை வளர்ச்சி அடையவேண்டும். அதனால் தான் தென்னக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏதும் கொடுப்பதில்லை. வைத்துக்கொண்டே வஞ்சிப்பதில்லை. கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் கொடுப்பதில்லை. சுற்றுலா இருப்பதால், வயநாடு தானே மீண்டுவரும். அதனால் மத்திய அரசு கவலை படவேண்டிய அவசியமில்லை.


Indian
ஆக 02, 2024 20:29

உத்தர பிரதேஷ் , பீகார் ஏழை மாநிலம் என்று எவன் சொன்னான் ??.


GMM
ஆக 02, 2024 18:30

மத்திய அரசு நிதியாக கொடுக்காமல் அபிவிருத்தி பணிகள் செய்து தர வேண்டும். மத்திய, மாநில பேரிடர் நிதி பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு அமுல்படுத்த வேண்டும். நதி, வனம், நீர் நிலை பராமரிப்பு, பாதுகாப்பு, பகிர்வு மத்திய அரசின் கீழ் இருக்க வேண்டும். மாநிலங்கள் ஓட்டுக்கு இயற்கை வளங்களை அழித்து விடும். மாநில அறிக்கையில் அரசியல். ஒரு உருப்படியான பணியும் காங்கிரஸ் மாநிலங்களுக்கு ஒதுக்கவில்லை.


Sivagiri
ஆக 02, 2024 17:55

ஆஹா ., வயநாடு சம்பவத்தை வைத்து , மத்திய அரசை என்ன சொல்லி திட்டலாம் - என்ன போராட்டம் நடத்தலாம் , எப்படி மோடி அரசு மீது பழியை போடலாம் என்று ரூம் போட்டு நாலு நாளா யோசித்ததில் , உதித்த யோஜனை - ஆஹா கண்டு பிடிச்சிட்டோம் - சோனியாவிடமும் ராஹுளிடமும் , பெரிய பாராட்டு கிடைக்கும் , சூப்பர் . .


Indian
ஆக 02, 2024 17:18

இதே நிலைமை பீகார் ஊ பி குஜராஜ் கு வந்திருந்தா உடனே கொடுப்பாங்க .


enkeyem
ஆக 02, 2024 19:56

பிகார் மற்றும் குஜராத் மக்கள் உமக்கு என்ன துரோகம் செய்தார்கள்?


Rpalnivelu
ஆக 02, 2024 17:18

குல்பர்கா கல்புர்கி எம்பி பதவியை பல வருடஙகளாக அனுபவித்து, தற்போது இவரது மகனையும் அமைச்சராக்கி விட்டார். இவருடைய தொகுதியில் போய் பார்த்தால் மிக மோசமாக இருக்கிறது. இவருடைய தொகுதியில் 75 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசாங்க மருத்துவமனையின் லட்சணத்தை பார்த்தாலே இவருடைய ஊழல் லட்சணம் புரிந்து விடும். பிற்படுத்த வகுப்பு என்கின்ற ஒரு தகுதியை வைத்துக் கொண்டு இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை


விஜய்
ஆக 02, 2024 17:13

வாய மூடும் மோடிக்கு தெரியும் என்ன செய்யணும்னு காங்கிரஸ் சொத்தை வித்து செய்ய வேண்டும்


Rpalnivelu
ஆக 02, 2024 17:10

இவர் குல்பர்கா கல்புர்கி மேப்


RAJ
ஆக 02, 2024 16:10

குடுப்பாங்க சார். கவலப்படாதீஙபா


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி