உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் ஜாமின் மனு தள்ளுபடி

பிரஜ்வல் ஜாமின் மனு தள்ளுபடி

பெங்களூரு : பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும், முன்னாள் எம்.பி., பிரஜ்வலின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பலாத்கார வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமின் கேட்டு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், பிரஜ்வல் மனு செய்து இருந்தார்.இந்த மனுவை நீதிபதி சந்தோஷ் கஜானா பட் நேற்று விசாரித்தார். அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பிரசன்ன குமார், மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சிகளை மிரட்ட வாய்ப்பு உள்ளது. இதனால், அவருக்கு ஜாமின் தர கூடாது என்று கேட்டு கொண்டார்.பிரஜ்வல் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், 'எனது மனுதாரர் நீதிமன்ற காவலில் இருக்கும் போதும், விசாரணை அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். அவரிடம் விசாரணை முடிந்துவிட்டது. இதனால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிரஜ்வலுக்கு ஜாமின் வழங்க மறுத்து, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை