உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோலாரில் 6 உள்ளாட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்

கோலாரில் 6 உள்ளாட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்

கோலார்: கோலார் மாவட்டத்தில் கோலார், தங்கவயல், முல்பாகல் ஆகிய மூன்று நகராட்சிகள்; பங்கார்பேட்டை, மாலுார், சீனிவாசப்பூர் ஆகிய மூன்று டவுன் சபைகள் உள்ளன. இந்த ஆறு உள்ளாட்சிகளுக்கும் இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு, கர்நாடக அரசு இடஒதுக்கீடு அறிவித்துள்ளது.நகராட்சிகள்கோலார்தலைவர்: பி.சி.ஏ., எனும் பிற்படுத்தப்பட்டோர் 'ஏ' பிரிவு,௸துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்.தங்கவயல்தலைவர்: எஸ்.சி., பெண்.துணைத் தலைவர்: பி.சி.ஏ.,முல்பாகல்தலைவர்: பி.சி.ஏ., பெண்துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்.டவுன் சபைகள்பங்கார்பேட்டைதலைவர்: -எஸ்.சி., துணைத் தலைவர்-: பொது பெண்.மாலுார்தலைவர்:- பொது பெண்.துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்சீனிவாசப்பூர்தலைவர்: பொது ஆண்துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்இதன்படி கோலார் மாவட்ட உள்ளாட்சிகளில் மூன்று தலைவர்கள், ஐந்து துணைத் தலைவர்கள் பதவிகளை பெண்களே பிடிக்க உள்ளனர்.தேர்தல் எப்போது?உள்ளாட்சிகளான நகராட்சி, டவுன்சபைகளுக்கு இரண்டாம் கட்ட தலைவர், துணைத்தலைவர் இட ஒதுக்கீடு ஆகஸ்ட் 5 ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்துவது குறித்து, கர்நாடக நகர மேம்பாட்டுத் துறை விரைவில் உத்தரவு பிறப்பிக்கும். - அக்ரம் பாஷா, கலெக்டர், கோலார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ