உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனக்கு மட்டும் நிதி எம்.எல்.ஏ., ஒப்புதல்

எனக்கு மட்டும் நிதி எம்.எல்.ஏ., ஒப்புதல்

கொப்பால்: ''வளர்ச்சி பணிகளுக்கு பணம் இல்லை. நான் முதல்வரின் பின்னால் இருப்பதால், எனக்கு பணம் வந்துள்ளது,'' என முதல்வரின் பொருளாதார ஆலோசகரும், காங்., மூத்த எம்.எல்.ஏ.,வுமான பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார்.கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:வாக்குறுதி திட்டங்களுக்கு, அதிகமான பணம் செலவாகிறது. இதனால் வளர்ச்சி பணிகளுக்கு பணம் இல்லை. எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி வளர்ச்சிக்கு, நிதி கேட்கின்றனர். ஆனால், பணம் இல்லை.ஆண்டுதோறும் வாக்குறுதி திட்டங்களுக்கு, 60,000 முதல் 65,000 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. பணிகளை நடத்த வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், நிதி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. நான் முதல்வரின் பொருளாதார ஆலோசகர் என்பதால், எனக்கு மட்டும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி