உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுககு...: துாக்கு தண்டனை!

மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுககு...: துாக்கு தண்டனை!

கோல்கட்டா:பாலியல் குற்ற வழக்குகளில் மரணம் ஏற்பட்டால், குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், 'அபராஜிதா' மசோதா எனப்படும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மசோதா மேற்கு வங்கத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் எதிர்க்கட்சியான பா.ஜ., - ஆளும் திரிணமுல் காங்., இடையே கடும் வாக்குவாதத்துக்கு மத்தியில், இந்த மசோதாவை நிறைவேற்றினார் முதல்வர் மம்தா பானர்ஜி.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாணவர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர், 25 நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இரண்டு கடிதம்

பாலியல் குற்ற வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்த வேண்டும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மம்தா இரண்டு கடிதங்களை எழுதிஇருந்தார்.இந்நிலையில், அபராஜிதா மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மேற்கு வங்க கிரிமினல் சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் மசோதாவை, முதல்வர் மம்தா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.இந்த மசோதாவின்படி, பாலியல் குற்றங்களில் உயிரிழப்பு ஏற்படுத்தினால், குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிப்பது, 21 நாட்களுக்குள் போலீஸ் விசாரணையை முடிப்பது, விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது, விசாரணைக்காக மாவட்ட அளவில் பணிக் குழுக்கள் உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

முன்மாதிரி

மசோதாவை தாக்கல் செய்து மம்தா பானர்ஜி பேசியதாவது:பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு இரண்டு கடிதங்கள் எழுதினேன். ஆனால், ஏற்கனவே உள்ள சட்டங்களில் கடுமையான பிரிவுகள் உள்ளதாக கூறிஉள்ளனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று கிரிமினல் சட்டங்களில், பெண்கள் பாதுகாப்புக்கான போதிய அம்சங்கள் இல்லை. இந்த ஓட்டைகளை அடைக்கும் வகையிலேயே, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி, மத்திய சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும். இந்த மசோதா, சட்டமாகும்போது, அதன் வெற்றி தெரியும். இது நாடு முழுதுக்கும் முன்மாதிரி சட்டமாக இருக்கும்.விரைவான விசாரணை, மிக வேகமான நீதி விசாரணை, அதிக தண்டனை உள்ளிட்டவையே, இந்த மசோதாவின் நோக்கம். பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில், ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும், தண்டனையை அதிகரிக்க வேண்டும் என, மத்திய அரசை கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால்தான், இந்த மசோதா கொண்டு வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்கது

பாலியல் பலாத்காரம் என்பது மனிதகுலத்தின் சாபம். சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் இவற்றை தடுக்கும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில், ஒரு புதிய வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை கொண்டு வந்துள்ளோம். மாவட்ட அளவில் இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க அபராஜிதா பணிக் குழு அமைப்பது போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.மசோதாவின் பல பிரிவுகளுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முறையாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும் என்பது உள்பட, பல திருத்தங்களை, பா.ஜ.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி முன் வைத்தார். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை ஏற்கப்படவில்லை.

கோஷமிட்டனர்

முன்னதாக, சட்டசபைக்கு மம்தா வந்தபோது, கோல்கட்டா ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்துக்கு பொறுப்பேற்று, அவர் பதவி விலக வேண்டும் என, பா.ஜ., உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.மசோதா மீதான விவாதத்தின்போது சுவேந்து அதிகாரி பேசியதாவது:பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை வழக்கில், மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்பும் நோக்கத்துடனேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், அதை உண்மையிலேயே இந்த அரசு செயல்படுத்த வேண்டும்.திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்களில், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிகள் நடந்தன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முயற்சிக்காமல், குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியிலேயே திரிணமுல் காங்., அரசு ஈடுபட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் பதவி விலக வேண்டும்

பெண்களை பாதுகாப்பதுடன், அவர்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை இந்த புதிய மசோதா நிறைவேற்றும். மத்திய சட்டங்களில் இதற்காக உரிய திருத்தம் செய்யும்படி கோரினோம். ஆனால் ஏற்கவில்லை.பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்காத, அதிக செயல்திறன் இல்லாத சட்டங்களுக்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

அடுத்தது என்ன?

சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, அடுத்ததாக, மாநில கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அவருடைய பரிந்துரையுடன், இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின், இது நடைமுறைக்கு வரும்.பாலியல் பலாத்காரத்துக்கு துாக்கு தண்டனை விதிக்கும் மசோதா, ஆந்திரா, மஹாராஷ்டிரா சட்டசபைகளில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதா, பல ஆண்டுகள் ஆகியும் கிடப்பில் உள்ளன. ஜனாதிபதி அனுமதிக்கு பின்னரே இதை நடைமுறைப்படுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

sundarsvpr
செப் 10, 2024 16:45

பாலியல் துன்புறுத்தல் சட்ட விரோதமாய் பொது சொத்தை அபகரித்தல் கடுமையான குற்றங்கள். உப்பு சப்பு இல்லாத விஷ்ணுவின் பேச்சு போன்றவைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து பல கடுமையான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வராமல் தடுக்கப்படுகின்றன. இவரை கைது செய்திட 200 காவல்காரர்கள் . தமிழக தலைமை அமைச்சர்க்கு இது தெரியாமல் இருக்காது. இப்பொது பல பாலியில் துன்புறுத்தல்கள் வெளியில் வருகின்றன. முதலில் சம்பவம் நடந்தவுடன் நடவடிக்கைகள் இல்லாமை நிச்சியம் காரணங்கள் இருக்கலாம் பாலியில் குற்றங்களுக்கு சௌதி அரேபியாவில் வழங்கப்படும் கத்தியால் கழுத்தை வெட்டும் தண்டனை சரியான நடவடிக்கை. இதுதான் சரியானது. பாலியல் பலாத்காரம் நாலு அறைக்குள் செய்வது கடுமையானது இவைகள் மேல்மட்டத்தினில் செய்வதால் வெளியில் தெரிவதில்லை. காரணம் எல்லா அரசியல் கட்சிகள் இதில் இணக்கம்.


adalarasan
செப் 04, 2024 22:08

சட்டங்களை இயற்றி என்ன பயன்? கண்துடைப்பு. இருக்கும் சட்டத்தை நடைமுறை படுத்தாமல், ?குற்றம் நடந்து,அதை பதிவு செய்ய 18 மணிநேரம் ஆனது ஏன், என்ற கோர்ட் கேள்விக்கு என்ன பதில் .


முருகன்
செப் 04, 2024 20:40

இந்த சட்டம் நாடு முழுவதும் இயற்றப்பட வேண்டும்


krishna
செப் 04, 2024 22:30

200 ROOVAA OOPIS CLUB MURUGAN.ARIVU SOTTUDHU.THUDAITHU KOLLAVUM.


Nandakumar Naidu.
செப் 04, 2024 19:51

இந்த தூக்கு தண்டனை சட்டத்தில் யாரை தூக்கில் போடவேண்டும் என்று யோசித்து பார்த்தால், பெண்கள்,குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை செய்பவர்களையும், சமூக விரோதிகளையும் காப்பாற்றும் அரசியல் தலைவர்களையும், முக்கிய மந்திரிகளையும் முதலில் தூக்கில் போடவேண்டும்.


தாமரை மலர்கிறது
செப் 04, 2024 18:59

ஆண்களை கற்பழிக்கிற பெண்களுக்கும் தூக்கு தண்டனை உண்டா தீதி?


Easwar Kamal
செப் 04, 2024 18:54

10 நாள் கழிச்சு சொல்லுறியே அதை தவறு நடந்த அன்றைக்கே சொல்லி இருந்தால் மக்கள் நம்பி இருப்பார்கள். அந்த பொண்ணு இறந்து இவ்வளவு நாள் கழிச்சு கூவுரியே உன்னை தான் முதல்ல தூக்குல போடணும். அது சரி இந்த பிஜேபி கட்சிங்க எவனும் வாய துறக்க மாட்டேங்கிறானுங்க. அந்த காம கொடூரன் நெத்தியில இவளவு பெரிய போட்டு இருக்கும்போது டவுட் வருது. பார்க்கும் போது எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்னு தோனுது.


நிக்கோல்தாம்சன்
செப் 04, 2024 16:52

மக்களின் வரிப்பணத்தை சிறுபான்மையினர் , கோட்டா, MUDA என்று செலவு செய்து ஆட்டைய போட்டு நாட்டை கற்பழிக்கும் மக்களுக்கும் இது பொருந்தும் அல்லவே ?


panneer selvam
செப் 04, 2024 15:43

Reality is criminal law is the same for whole India . We can not have a separate clause for each state . Every lawyers know about but somehow they are silent . Mamata ji law can not be enforced unless Central government enacts a new law or amendment


ManiK
செப் 04, 2024 14:29

மம்தாஜி - இந்த அலப்பறை சட்டம் பங்லாதேஷ் ஊடுருவிகள் and மைநாரிடீஸ்க்கு கிடையாதுன்னு சொல்ல மறந்துடீங்களா?!!


Sivagiri
செப் 04, 2024 13:11

என்ன செய்றதுன்னே தெரியல, அவ்வளவு பதட்டம், படபடப்பு, ப்ரெஸ்ஸர் நிமிஷத்துக்கு நிமிஷம் ஏறிக்கிட்டே இருக்கு, ரத்த குழாய் வெடிச்சிடும் போல இருக்கு, யாரை காப்பாத்துறது, யாரை பலிகடா ஆகுறதுன்னே தெரியல,... திடீர்னு ஒரு ஞானோதயம் வந்திருச்சு . . . நாம் எதுக்கு பிரச்சினையை தூக்கிக்கிட்டு அயனும்? டென்ஷன் ஆகணும்? அதை அப்டியே தூக்கி பக்கத்து வீட்ல எரிஞ்சிடலாம்னு பாத்தாங்க... பக்கத்து வீட்டுக் காரன் எல்லாம் உஷாரா ஆயிட்டார்கள்... சரி , அப்டியே பார்ஸல் பண்ணி டில்லிக்கு அனுப்பிடலாம்னு அனுப்பீடாங்க . . .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை