உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழல்: முன்னாள் அமைச்சர் கைது

வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழல்: முன்னாள் அமைச்சர் கைது

பெங்களூரு :கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் சந்திரசேகர், 52.ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாய் நிதியில் 89 கோடி ரூபாய் சட்டவிரோதமாக வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து, பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் நாகேந்திரா, பதவியை ராஜினாமா செய்தார். இந்த முறைகேட்டில் பெங்களூரு யூனியன் வங்கிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. வங்கியின் மண்டல மேலாளர் அளித்த புகாரில், சி.பி.ஐ.,யும் தனியாக விசாரித்து வந்தது. சி.பி.ஐ., விசாரணையில் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து தகவல் கிடைத்ததால், அமலாக்க துறைக்கு அத்தகவல்களை அளித்தது.இதனால், கடந்த 10 மற்றும் 11ம் தேதி முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, வீடு உட்பட 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.இந்நிலையில், நேற்று காலை பெங்களூரில் உள்ள நாகேந்திரா வீட்டிற்கு அமலாக்கத் துறையினர் சென்று, அவரை விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இரவு 8:30 மணிக்கு நாகேந்திராவை, அமலாக்கத் துறை கைது செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை