டில்லியில் குப்பை கிடங்கில் பற்றியது தீ: மக்கள் பாதிப்பு
புதுடில்லி: டில்லியில் உள்ள காஜிபூர் குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து பரவி வருவதால், உள்ளூர்வாசிகள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.டில்லியில் உள்ள காஜிபூர் குப்பைக் கிடங்கில் நேற்று (ஏப்ரல் 21) மாலை எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனால் தீயில் இருந்து தொடர்ந்து புகை கிளம்பி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.மூச்சுத் திணறல்
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்களுக்கு இருமல், தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. குப்பை கிடங்கில் இருந்து புகையால், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. கண்களில் எரிச்சலை எங்களால் தாங்க முடியவில்லை. இந்த பிரச்னையை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறினர். டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திரா சச்தேவா காஜிபூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிட்டார்.தீயை அணைக்கும் பணி தீவிரம்
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ‛‛ தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க நீண்ட நேரமாக போராடி வருகின்றனர். தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.