உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குலாம் நபி போட்டியில்லை

குலாம் நபி போட்டியில்லை

ஸ்ரீநகர், லோக்சபா தேர்தலில், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் போட்டியிடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் மொத்தமுள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளில் ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்குள்ள அனந்த்நாக் - ரஜோவ்ரி தொகுதிக்கு மே 7ல் தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில், மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் மூத்த தலைவர் மியான் அட்லப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி சார்பில், அதன் தலைவர் குலாம் நபி ஆசாத் இங்கு போட்டியிடுவார் என கடந்த 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அக்கட்சி வேட்பாளராக முகமது சலீம் பாரே போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் காஷ்மீர் தலைவர் முகமது அமின் பாட் கூறியதாவது: குலாம் நபி ஆசாத்துடன் நடந்த ஆலோசனைக்கு பின் வழக்கறிஞர் சலீம் பாரே, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் அனந்த்நாக் - ரஜோவ்ரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் சில காரணங்களால் ஆசாத் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை