உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5வது மாடியில் இருந்து விழுந்த நாய்; தலையில் விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு!

5வது மாடியில் இருந்து விழுந்த நாய்; தலையில் விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய், சாலையில் நடந்து சென்ற சிறுமி தலையில் விழுந்தது. இதில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.மஹாராஷ்டிரா, மும்பையில் உள்ள மும்ப்ரா பகுதியில் சாலையில் தாயுடன் 3 வயது சிறுமி சென்று கொண்டிருந்தார். அப்போது 5வது மாடியில் இருந்து, சிறுமியின் தலையில், திடீரென நாய் ஒன்று விழுந்தது. இதில் 3 வயது சிறுமி மயக்கம் அடைந்தார். தாய், கதறியபடி சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி இறந்து விட்டதாக கூறியதும், தாய் அதிர்ந்து போனார். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

விசாரணை

இதற்கிடையே சிறுமி மீது விழுந்த நாய், அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுமியின் தலையில் நாய் விழும் போது, அருகில் இருந்து சி.சி.டி.வி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நாய் தவறுதலாக விழுந்ததா, அல்லது வேண்டுமென்றே தூக்கி எறியப்பட்டதா, என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAM
ஆக 14, 2024 23:21

மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய வேதனையான சம்பவம்.


தமிழ்வேள்
ஆக 08, 2024 19:58

கவனக்குறைவாக இருந்ததாக தாய் மீதும், நாயை பாதுகாக்க தவறியதாக நாய் ஓனர் மீதும் கேஸ் போட்டு நாய்க்கு நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடத்தும் பீட்டா அமைப்பு.. வெயிட் அன்ட் ஸீ..


ஆரூர் ரங்
ஆக 08, 2024 17:36

கபால பைரவ மோட்சம்.. பாவம் அக்குழந்தை.


Sakthi Sakthiscoops
ஆக 08, 2024 12:55

கடவுளே நடத்துகிறார். எல்லையில்லா வல்லமை கொண்டவன் எளிய உயிர்களை வதைப்பதும் ஏனோ, உயிர்களை நிம்மதியாக வாழ வைக்கும் தகுதியற்ற இறைவன் தொடர்ச்சியாக உயிர்களை படைப்பதும் ஏனோ. தோல்வியாளனே படைப்பை நிறுத்து. பிறவிகளை நிறுத்து தெய்வமே


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 12:34

எப்படியெல்லாம் மரணம் வருகிறது


Ramesh Sargam
ஆக 08, 2024 12:25

நாய் விழுந்து சிறுமி உயிரிழப்பு. மிகவும் வேதனை அளிக்கும் விஷயம். அந்த சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் எப்படி இந்த துயரத்தை தங்குவார்கள். இது விதியா அல்லது வேறு என்னவென்று சொல்வது?


S Regurathi Pandian
ஆக 08, 2024 10:59

மிகவும் வேதனையான சம்பவம்.


Nandakumar Naidu.
ஆக 08, 2024 10:37

மிகவும் சோகமான நிகழ்வு. அந்த குழந்தையின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை