மேலும் செய்திகள்
தொடர்ந்து மக்கள் பணியாற்றுங்கள்: பிரதமர் மோடி
2 hour(s) ago
ரோஸ் அவென்யூ,:கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீதான விசாரணையை 19ம் தேதிக்கு டில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.டில்லியில் 2021 - 22ம் ஆண்டுக்கான புதிய மதுபானக் கொள்கையை ஆம் ஆத்மி வகுத்தது. இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து கொள்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும் இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ.,யும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன.சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, அவர் சார்பில் தாக்கல் செய்த மனு, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முகேஷ் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறை அவகாசம் கோரியது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.அப்போது, கெஜ்ரிவாலின் உடல்நிலை மற்றும் சிகிச்சையை தீர்மானிக்க அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் நடவடிக்கைகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பார்க்க தன் மனைவியை அனுமதிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த விண்ணப்பம் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
2 hour(s) ago