உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் கொட்டுது மழை: குளம்போல் ரயில்நிலையம்: சாலைகளில் ஓடுது தண்ணீர்

மும்பையில் கொட்டுது மழை: குளம்போல் ரயில்நிலையம்: சாலைகளில் ஓடுது தண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மஹராராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே, ரத்னகிரி, ராய்காட் அமராவதி மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் விடியவிடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6t7r4hsy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல வழித்தடங்களில் உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ரயில் நிலையங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. புனே, ரத்னகிரி, ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மும்பையில் பல்வேறு இடங்களில் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மும்பையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் மூழ்கிய இடங்களை வீடியோ எடுத்து, அப்பகுதி மக்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

50 விமானங்கள் ரத்து

கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு வர வேண்டிய மற்றும் அங்கிருந்து புறப்பட வேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAAJ68
ஜூலை 08, 2024 15:15

இவ்வளவு தண்ணீரிலும் அங்கே ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் ரயில் இயக்குபவர்களை மும்பை அனுப்பினால் ராஜினாமா செய்து விடுவார்கள்.


Balasubramanian
ஜூலை 08, 2024 09:53

இது வருடா வருடம் நடக்கும் நிகழ்சி! இது நடந்தால் மும்பை வாசிகள் பருவ மழை உச்சத்தை எட்டி விட்டது, வருடம் பூராவும் குடிநீர் பிரச்சினை இருக்காது என்று மகிழ்வார்கள்


முருகன்
ஜூலை 08, 2024 08:50

ஆளும் அரசின் நிர்வாக சீர்கேடுகள் தான் இதற்கு காரணமாக இருக்கும் அல்லவா


Mohan
ஜூலை 08, 2024 10:00

சும்மா மேதாவி மாதிரி பேசக்கூடாது ..மும்பை பத்தி உனக்கு என்ன தெரியும் .. ஆண்டவனால் கூட தண்ணிய வெளியேற்ற முடியாது ...காலம் காலமா நடக்குற விஷயம் தான் இங்க அதெல்லாம் பெருசு பண்ணமாட்டாங்க அந்தளவுக்கு இடம் நெருக்கடி, கடலுக்குள்ள நெறய பிளாட் போட்டு இருகாங்க பாலம் கட்டிஇருக்காங்க.


paraman
ஜூலை 08, 2024 11:32

உங்களுக்கு மும்பை மழையைப் பற்றி தெரியாது. நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் கடல் மட்டத்திலிருந்து கீழே உள்ளன. அதிகமாக மழை பெய்யும் பொழுது உயர் அலையும் ஆரம்பித்துவிட்டால் கடல்நீர் உள்ளே வராமல் இருக்க கடலுக்கு செல்லும் வடிகால் கதவை மூடிவிடுவார்கள். தாழ் அலை ஆரம்பிக்கும் வரை மழை நீர் வடிய சாத்தியமில்லை. வருடத்தில் சுமார் நான்கு நாட்கள் இப்படி ஆகிவிடும் .


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ