உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிர்ஷ்டம் இருந்தால் சிவகுமார் முதல்வராவார்

அதிர்ஷ்டம் இருந்தால் சிவகுமார் முதல்வராவார்

மைசூரு: ''அதிர்ஷ்டம் இருந்தால், சிவகுமார் முதல்வராவார்,'' என, சாமுண்டீஸ்வரி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:தேவகவுடா, 1996ல் பிரதமரானபோது, சித்தராமையாவை, மாநிலத்தின் முதல்வராக்க வேண்டும் என்று நாங்கள் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் மனுவில் கையெழுத்திட்டோம். ஆனால் அது நிறைவேறவில்லை.சித்தராமையா, 2004ல் முதல்வராக வருவார் என்று பிரசாரம் செய்தோம். ஆனால் தரம்சிங் முதல்வரானார்; சித்தராமையா துணை முதல்வராக பதவியேற்றார்.அதுபோன்று, சிவகுமாருக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அவரும் முதல்வராவார். அவர் தொடர்பான விமர்சனங்களுக்கு அவரே பொறுப்பாளியாவார்.பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. பல்வேறு துறை மேம்பாட்டுப் பணிகள் செய்ய வேண்டி உள்ளது. டவுன் பஞ்சாயத்து வளர்ச்சிக்கு நிதி இல்லை. இது தொடர்பாக ஆய்வு கூட்டம் கூட்டி, தகவல்கள் பெறப்படும். அதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். மைசூரு மாநகராட்சியுடன் டவுன் பஞ்சாயத்தை இணைத்து கிரேட்டர் மைசூரு மாநகராட்சியாக்க வேண்டும். கபினி அணையில் இருந்து டவுன் பஞ்சாயத்துக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் உட்பட பல விஷயங்கள் பட்ஜெட்டில் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.ஆறு மாதத்துக்குள் கிரேட்டர் மைசூரு உருவாக்கி, இந்தாண்டுக்குள் தேர்தல் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை