உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் சொல்கிறார்!

ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் சொல்கிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார். ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்காக ஆட்சி நடத்துகிறார். ஒடிசா மக்களின் பணத்தை அமித் ஷா, நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் சேர்ந்து திருடிவிட்டார்கள். சுரங்க ஊழல் மூலம் ஒன்பது லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நில அபகரிப்பு மூலம் 20,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், உங்கள் பணத்தைத் திருப்பித் தருவோம்.

1 லட்சம் ரூபாய்

ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.

புரட்சிகர பணி

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம். அனைத்து ஏழை குடும்பங்களின் பட்டியல் தயாரித்து, குடும்பத்தில் இருந்து ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு, அவரது வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Easwar Kamal
மே 01, 2024 19:16

உங்க கிட்ட ஒரு உண்மை இல்லையே அதுதானே பிரச்சினை .


Pandi Muni
மே 01, 2024 09:19

வாங்க பாகிஸ்தானோடு சேர்ந்து நாமளும் பிச்சை எடுப்போம்


Kuppan
ஏப் 30, 2024 18:37

வேற ஒன்னும் இல்லை, நம்பாளு கணக்குல வீக்கு, கணக்கு என்றாலே கணக்கு பிணக்கு மணக்கு என்று கணக்கு வகுப்பில் கட் அடிச்சி ஊர் சுற்றி இருப்பர் போல், நாம ஊரு கணக்கு பிள்ளை பசி எடுத்து சொல்ல வேண்டும் அவருக்கு தலைக்கு லட்சம் கொடுத்தால் எவ்வளவு தேவை படும் என்று நம்ம லோக்கல் பப்பு ரூ கொடுப்பதுக்கே நாக்கு தள்ளுது, அதையும் தகுதி வாய்ந்த என்று உருட்ட வேண்டியதா போச்சி


R.MURALIKRISHNAN
ஏப் 30, 2024 16:08

விரக்தி உங்களை இப்படி பேச வைக்கிறது இந்தியாவை ஓசி சோறு போட்டு இதுவரை வளர்த்து வந்தது இந்தியா அதை முன்னேற்ற பாடுபடு இல்லை


ராமகிருஷ்ணன்
ஏப் 29, 2024 13:41

சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சி வெறி பிடித்து திரியும் நிலைக்கு வந்து விட்டது. தோல்வி பயத்தின் உச்சியில் காங்கிரஸ் உள்ளது


KRISHNAN R
ஏப் 29, 2024 07:57

இது போல் மக்கள் வரி பணத்தை இஷ்டம் போல் செலவு செய்ய மக்கள் ஆட்சி இல்லை மறைமுக ஊழல் மக்கள் இலவசம் மற்றும் போதை மது எல்லாமே நாட்டை சீரழிகிறது தாய் நாட்டை வெளி நாட்டில் விமர்சனம் செய்த ஒரே நல்லவர் இவர் தான்


A1Suresh
ஏப் 28, 2024 22:29

மாதம் மூவாயிரம் தந்தால் எந்த இளைஞன் வேலைக்கு போவான் ? இவரப் போலவே ஊர் சுற்றுவான்


A1Suresh
ஏப் 28, 2024 22:28

சஞ்ஜய் ராவத் கருத்துப்படி தினந்தோறும் ஒரு பிரதமர் என்பதே அந்த புரட்சியாம் திங்கட்கிழமை கேஜ்ரிவால் செவ்வாய்கிழமை மம்தா தீதி புதன்கிழமை சுடாலின் வியாழக்கிழமை தேஜஸ்வி யாதவ் வெள்ளிக்கிழமை சரத் பவார் சனியும்ஞாயிறும் இந்த பப்பு நாடும் கஜானாவும் விளங்கிவிடும்


Ramesh Sargam
ஏப் 28, 2024 20:35

நீங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பார்த்து கொள்ளலாம்


h
ஏப் 28, 2024 20:12

useless party useless man


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி