| ADDED : ஏப் 18, 2024 04:09 AM
குடகு, : ''ஓட்டு போடாவிட்டால், நமது அடையாளத்தை இழந்து விடுவோம்,'' என, இந்திய பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் அங்கிதா சுரேஷ் கூறினார்.கர்நாடகாவில் வரும் 26ம் தேதி முதல் கட்டமாகவும், அடுத்த மாதம் 7ம் தேதி இரண்டாம் கட்டமாகவும், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து, மாவட்ட நிர்வாகங்கள், மாநகராட்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்களும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.ஓட்டுப்பதிவு குறித்து இந்திய பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் அங்கிதா சுரேஷ் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில் ஓட்டு போடும் தகுதி உள்ள அனைவரும், கட்டாயம் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடா விட்டால் நமது அடையாளத்தை இழந்து விடுவோம். ஓட்டு போடுவது நமது உரிமை.ஒரு நல்ல மக்கள் பிரதிநிதி தேர்ந்து எடுக்கப்பட்டால், நாடு வளர்ச்சி அடையும். ஓட்டு போடும்போது கவனமாக இருக்க வேண்டும். பணம், பரிசு பொருட்களுக்கு ஆசைப்படாமல், சரியான நபருக்கு ஓட்டு போட வேண்டும். நமது ஓட்டு, நம் நாட்டை மாற்றும்.இவ்வாறு அவர் கூறினார்.