உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி 4 ஆண்டில் 56,261 வழக்குகள்

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி 4 ஆண்டில் 56,261 வழக்குகள்

பெங்களூரு: 'ஆன்லைன்' மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 56,261 ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளது, போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவில் ஆன்லைன் மோசடி செய்வோர், ஏழைகள், நடுத்தர மக்கள் மட்டுமின்றி, படித்து நல்ல பணியில் இருப்பவர்களையும் விட்டு வைப்பதில்லை. 'வங்கியில் இருந்து பேசுகிறோம், உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி., எண் வந்திருக்கும். அதை கூறுங்கள்' என கூறுவர். அந்த எண்ணை வாங்கிய சில நிமிடங்களில், சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கும்.சிலர், 'உங்களுக்கு ஆன்லைன் லாட்டரியில் பணம் விழுந்துள்ளது. அதை உங்களின் வங்கி கணக்கில் டிபாசிட் செய்ய வேண்டுமானால், குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்' என கூறி ஏமாற்றுகின்றனர். குறிப்பாக முதியோர், பெண்கள் மட்டுமே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.இன்னும் சிலர், படித்த இளைஞர்களை குறி வைத்து, வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறியும் ஏமாற்றி வருகின்றனர். இந்த மோசடிகளை தடுக்க, மாவட்டம் தோறும் ஒரு சைபர் கிரைம் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மொத்தம் 24 சி.இ.என்., எனும் சைபர் கிரைம், பொருளாதார குற்றங்கள், போதைப்பொருள் தடுப்பு போலீஸ் நிலையங்களும் உள்ளன.இத்தகைய சைபர் குற்றங்களை தடுக்க, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பொது மக்கள் வசதிக்காக, மத்திய அரசும், 'தேசிய சைபர் கிரைம் பதிவு இணையதளத்தை' துவக்கி உள்ளது. 1930 மற்றும் 112 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், குற்றச் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி