உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: துணைமுதல்வர்

இண்டியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: துணைமுதல்வர்

பெங்களூரு: ''மத்தியில் இம்முறை 'இண்டியா' கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும். எனவே பா.ஜ.,வினர் பிரதமர் ஆகும் வாய்ப்பு இல்லை,'' என துணை முதல்வர் சிவகுமார், உறுதியாக கூறினார்.பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், அக்கட்சி பிரமுகர்களுடன், துணை முதல்வர் சிவகுமார், நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.பின், அவர் கூறியதாவது:கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தான், சட்ட மேலவை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பிளாக் தலைவர்கள் முதல், அனைவரும் மேலவை தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்.லோக்சபா தேர்தல் போன்று, திட்டமிட்டு மேலவை தேர்தலை எதிர்கொள்வோம். பா.ஜ., - ம.ஜ.த., மேலவை மட்டுமின்றி, நிரந்தரமாகவும் கூட்டணி வைத்து கொள்ளட்டும். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அந்த கட்சி தலைவர்கள் எந்த முடிவு வேண்டும் ஆனாலும் எடுத்து கொள்ளட்டும். எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. மத்தியில் இம்முறை 'இண்டியா' கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும். எனவே பா.ஜ.,வினர் பிரதமர் ஆகும் வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி