உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்டில் இன்று இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்

பார்லிமென்டில் இன்று இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மத்திய பட்ஜெட் பாரபட்சமானது என கூறி, பார்லிமென்ட்டில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக, 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பீஹார், ஆந்திராவுக்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலர் சபைக்குள் குரல் எழுப்பினர். தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் எம்.பி.,க்கள் பலர், 'எங்கள் மாநிலத்திற்கு ஒன்றுமே இல்லையா' என, சத்தமாக கேட்டனர்.குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்குவதாக அமைச்சர் கூறியபோது, தமிழக எம்.பி.,க்கள் எழுந்து கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அவர்களை சபாநாயகர் அமைதிப்படுத்தினார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல எம்.பி.,க்கள், 'இது நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்' என விமர்சித்தனர். இந்நிலையில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.அதில், மத்திய பட்ஜெட் மிகவும் பாரபட்சமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பீஹாரையும் ஆந்திராவையும் தவிர்த்து பிற மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து, பார்லிமென்ட் நுழைவு வாயிலில் இண்டியா கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இதேபோல், வரும் 27ல் நடக்கவுள்ள 'நிடி ஆயோக்' கூட்டத்தில் காங்., ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mettai* Tamil
ஜூலை 24, 2024 11:39

ஆர்ப்பாட்டமா , நம்ம 40 க்கு உடம்பு ஒத்துக்காதுங்க, நல்லா வஞ்சனையில்லாமல் எல்லாத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்ட பிஞ்சு உடம்புங்க ......பாத்து பண்ணுங்க ......


Ramesh Sargam
ஜூலை 24, 2024 09:40

அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யாத நாட்கள் உண்டா, நேரம் உண்டா, இடம் உண்டா? எப்பொழுதும் ஆர்ப்பாடம்தான்?


nv
ஜூலை 24, 2024 09:37

வாக்களிப்பது திருட்டு திராவிட கும்பலுக்கு.. இப்போ மட்டும் கூவ வேண்டியது.. 40MP க்கள் சமூசா டீ குடிக்க டெல்லி சென்று வர வேண்டியது தான்.. மக்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லை


S S
ஜூலை 24, 2024 10:43

பிஜேபிக்கு ஒட்டளிக்கவில்லை எனில் உங்களுக்கு நாமம்தான் என்பதை தெளிவாக்கிவிட்டார்கள்


Swaminathan L
ஜூலை 24, 2024 09:34

நேற்றைய பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு நிதிஷ், நாயுடு ஸப்போர்ட் இன்னும் கெட்டியாகி விட்டதல்லவா கூட்டாளிகளுக்கான பட்ஜெட் என்று கூக்குரல் கிளம்பியதே உடனே. பட்ஜெட்டின் இதர அம்சங்கள் அனைத்தும் நாடு தழுவிய அமலாகும் தானே? இண்டி கூட்டணிக் கட்சி ஆட்சி நடக்கும் மேற்கு வங்கம், இமாசலப் பிரதேசம் ஆகியவற்றுக்கும் தான் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனவே? இன்னும் ஐந்து வருடங்களுக்குத் திண்ணை காலியாகாது என்று உறுதிபடத் தெரிந்து விட்டதால் இன்று போராட்டம் நடத்தும் கட்டாயம்.


Nallavan
ஜூலை 24, 2024 09:26

தமிழகத்திற்கு எந்த திட்டமும், வெள்ள நிவாரணமோ இல்லை, வெத்துவேட்டு திட்டஅறிக்கை தமிழன் எப்பொழுதும் ஏமாற்ற படுகிறான்


Mettai* Tamil
ஜூலை 24, 2024 11:32

ஆமா நல்லவனே வல்லவனே, ஊழல் லஞ்ச பணம், குவார்ட்டர் கொடுத்து ஒட்டு வாங்கப்பட்டு, தமிழன் எப்பொழுதும் ஏமாற்ற படுகிறான்.........


Pandiarajan Thangaraj
ஜூலை 24, 2024 07:31

இதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது


ramani
ஜூலை 24, 2024 06:41

தேசத்தை முன்னேற விடாமல் என்னென்ன செய்யுமோ அதையெல்லாம் பரப்புவதும் அவனது கூலியாட்களும் செய்கிறார்கள். இவர்கள் கொட்டத்தை முதலில் ஒடுக்க வேண்டும்


vijai
ஜூலை 24, 2024 06:06

காங்கிரசுக்கு 99 சீட்டு கொடுத்தது பெரிய விஷயம் அடுத்த தேர்தலில் இதைவிட கேவலமா கொடுக்கணும்


Srinivasan Ramarao
ஜூலை 24, 2024 05:58

எல்லோருக்கும் தங்களுக்கு பங்கு வேண்டும் .அதில் எவ்வளவு சுரண்டலாம் .நாடு எக்கேடு கெட்டு போகட்டும் .கேட்டதை கொடுத்தால் நல்ல பட்ஜெட் .இல்லை என்றால் நாறுகிற பட்ஜெட் .பாரளு மன்றம் நடத்தவிடாமல் நாங்கள் உள்ளேயும் வெளியேயும் இருந்து கைக்கூலி வாங்கிகொண்டுகத்துவோம் .


Kasimani Baskaran
ஜூலை 24, 2024 05:38

போண்டா சாப்பிட விடாமல் இப்படி இந்திக்கூட்டணி தொல்லை கொடுத்தால் ஏற்கனவே உடைந்துள்ள கூட்டணியே மேலும் உடைந்து விட அதிக வாய்ப்புண்டு.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை