உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய பாராலிம்பிக் வீரர் பிரமோத் பகத் தகுதி நீக்கம்: காரணம் இதுதான்!

இந்திய பாராலிம்பிக் வீரர் பிரமோத் பகத் தகுதி நீக்கம்: காரணம் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத் போட்டிகளில் பங்கேற்க ,18 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 3 முறை ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றிருந்தவர் பிரமோத் பகத். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பாட்மின்டன் போட்டியில், இந்தியாவுக்காக விளையாடி அசத்தியுள்ளார்.

ஊக்க மருந்து

இவர் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பாரீஸ் பாராலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த 12 மாதங்களில் 3 முறை ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதாலும் பிரமோத் பகத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்க முடியாது!

விதிமுறைகளை மீறியதாலும், எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரிவிக்காததாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பிரமோத் பகத் பங்கேற்க முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

nagendhiran
ஆக 13, 2024 13:12

ஒரு தனிமனிதன் ஊக்கமருந்து எடுத்து விளையாட கூட உரிமை இல்லையா? தனிமனித சுதந்திரம் எங்கே?


seshadri
ஆக 13, 2024 11:58

எல்லா மோடி எதிர்ப்பாளர்களும் வாங்கப்பா இதற்கும் மோடிதான் காரணம் என்று கூவுங்கோ. வாங்கின காசுக்கு முடிந்த மட்டும் கூவுங்கள்.


Sampath Kumar
ஆக 13, 2024 11:30

பாரிஸ் ஈபிள் டோராய் நல்ல பயன் படுத்து போல என்ன அடி ஜென்மத்துக்கும் இனி ஒலிம்பிக் பக்கம் போக முடியாது போல


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை