மேலும் செய்திகள்
பெரும் அவமானம்!
4 hour(s) ago | 1
பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!
5 hour(s) ago | 3
பெங்களூரு, : ''நடிகர் தர்ஷன் விரும்பினால், எனக்கு பதிலாக வேறு வக்கீலை நியமித்து கொள்ளலாம்,'' என, வக்கீல் நாராயணசாமி தெரிவித்தார்.சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் கைதாகி, பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்காக வாதிட வக்கீல் நாராயணசாமியை நியமித்துள்ளார். இவர் நேற்று சிறைக்குச் சென்று, தர்ஷன், பவித்ரா கவுடாவை சந்தித்துப் பேசினார்.பின் அவர் அளித்த பேட்டி:தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடாவின் வக்கீல் என்பதால், எனக்கு கோடிக்கணக்கான ரூபாய் 'பீஸ்' கிடைக்கும் என, கருதுவது தவறு. இவர்களுடன் சிறையில் உள்ள நான்கைந்து குற்றவாளிகள் மிகவும் ஏழைகள்.தங்களை எதற்காக சிறையில் வைத்துள்ளனர் என்பதே, அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு ஆதரவாகவும் நான் வாதிடுகிறேன்.தர்ஷன், என்னை தன் வக்கீலாக நீட்டிப்பார் என்பது உறுதியில்லை. வரும் நாட்களில் எனக்கு பதிலாக, வேறு வக்கீலை அவர் நியமிக்கலாம்.இவ்வாறு அவர்கூறினார்.
4 hour(s) ago | 1
5 hour(s) ago | 3