உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் மாற்றம் விஷயம்  மடாதிபதிகளுக்கு தேவையா? 

முதல்வர் மாற்றம் விஷயம்  மடாதிபதிகளுக்கு தேவையா? 

ஹூப்பள்ளி: பாகல்கோட் கூடல சங்கம பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்சய சுவாமிகள், ஹூப்பள்ளியில் நேற்று அளித்த பேட்டி:கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வரை மாற்றுவது காங்கிரஸ் மேலிடம் சம்பந்தப்பட்ட விஷயம். இவ்விஷயத்தில் மடாதிபதிகள் யாரும் தேவை இன்றி தலையிட கூடாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இட ஒதுக்கீடு கிடைக்கும் என நினைத்து, அக்கட்சியை ஆதரித்தோம்.ஆனால், இதுவரை இடஒதுக்கீடு வழங்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் சித்தராமையா என்னிடம் கூறியிருந்தார்.ஆனால் அதற்கான முயற்சிகளை அவர் எடுக்கவில்லை. வரும் நாட்களில் இட ஒதுக்கீடு கேட்டு, எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட போராட்டங்கள், என்னை வெகுவாக கவர்ந்தன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை