| ADDED : ஆக 20, 2024 11:31 PM
எலக்ட்ரானிக் சிட்டி : பிளாஸ்டிக் பைக்குள் கட்டப்பட்டிருந்த ஹீலியம் வாயுவை சுவாசித்து, ஐ.டி., நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.ஹாசன் மாவட்டம், சக்லேஷ்பூரை சேர்ந்தவர் யாஷிக், 22. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள பிரபல ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார்.சில மாதங்களாக வீட்டில் இருந்தபடி பணியாற்றினார். சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு வந்தார். எலக்ட்ரானிக் சிட்டி நீலத்ரி நகரில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தார்.நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றுவிட்டு இரவு அறைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை அறையில் இருந்து வெளியே வரவில்லை.சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், யாஷிக்கின் அறை கதவை தட்டினர். அவர் திறக்கவில்லை. அங்கு வந்த எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். யாஷிக் இறந்து கிடந்தார்.விசாரணையில் ராட்சத பலூன்களுக்கு காற்று அடைக்க பயன்படுத்தப்படும், ஹீலியம் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்தது தெரிந்தது. காரணம் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.