மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 hour(s) ago | 2
பரப்பன அக்ரஹாரா: சிறையில் உள்ள நடிகர் தர்ஷனை, அவரது தாய், சகோதரர், மனைவி, மகன் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, அவரது தாய் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.தன் தோழி பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறி, சித்ரதுர்காவை சேர்ந்த தன் ரசிகர் ரேணுகாசாமியை, கொலை செய்ததாக, நடிகர் தர்ஷன் மீது புகார் பதிவாகி உள்ளது. தற்போது, நீதிமன்ற காவலில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.சிறையில் இருந்து அவரை, சில நாட்களுக்கு முன், அவரது மனைவி, மகன் நேரில் வந்து நலம் விசாரித்து சென்றனர். அந்த வகையில், நேற்று காலை அவரது தாய் மீனா, சகோதரர் தினகர், மனைவி விஜயலட்சுமி, மகன் வினீஸ் ஆகியோர் சிறையில் தர்ஷனை சந்தித்தனர்.அப்போது, தர்ஷனும், அவரது தாயும் கண்ணீர் விட்டு அழுததாக தகவல் வெளியாகி உள்ளது. சகோதரனிடம் நடந்த விஷயத்தை விளக்கி உள்ளார். மகனை கொஞ்சி, மனைவிக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.தாயை அணைத்து கொண்டு தர்ஷன் அழுதுள்ளார். அப்போது, 'சட்டப்படி சந்திப்போம், கவலைப்படாதே' என்று அவருக்கு தைரியம் தெரிவித்துள்ளனர். மொத்தம், 20 நிமிடங்கள் தர்ஷனுடன் அவரது குடும்பத்தினர் பேசி உள்ளனர்.
6 hour(s) ago | 2
11 hour(s) ago
11 hour(s) ago | 2