மேலும் செய்திகள்
பண மோசடி வழக்கு அனில் அம்பானியின் உதவியாளர் கைது
3 hour(s) ago
பல்லாரி: பல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக, வீட்டு வசதி அமைச்சர் ஜமிர் அகமதுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.பல்லாரி ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாகேந்திரா. கர்நாடக விளையாட்டு, பழங்குடியினர் நல அமைச்சராக இருந்தார்.பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, அதிகாரியாக பணியாற்றிய சந்திரசேகர், 52, என்பவர், கடந்த மாதம் 11ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் நாகேந்திரா, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடம் இருந்த துறைகள் முதல்வர் வசம் சென்றது.பல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.இதையடுத்து பல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவிக்கு, தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட் காய் நகர்த்தினார். ஆனால் பல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக, வீட்டு வசதி அமைச்சர் ஜமிர் அகமதுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், ஏற்கனவே விஜயநகரா மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார். பல்லாரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தான், விஜயநகரா தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3 hour(s) ago