உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவிக்காக முட்டி மோதுவதா? பசவராஜ் பொம்மை அதிருப்தி!

பதவிக்காக முட்டி மோதுவதா? பசவராஜ் பொம்மை அதிருப்தி!

ஹாவேரி: ''கர்நாடக அரசில் பதவி நாற்காலிக்காக, மோதல் நடக்கிறது. இவ்வளவு அனுபவம் உள்ள முதல்வரும், துணை முதல்வரும் நாற்காலிக்காக முட்டி மோதுவது சரியல்ல,'' என, பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.மேலவை காங்கிரஸ் தலைமை கொறடா சலீம் அகமது, 'மாநில காங்கிரஸ் அரசு கவிழும் என, பசவராஜ் பொம்மை பகல் கனவு காண்கிறார். மத்திய அரசின் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கட்டும்' என விமர்சித்தார்.இவருக்கு பதிலடி கொடுத்து, ஹாவேரியில் நேற்று பசவராஜ் பொம்மை அளித்த பேட்டி:சலீம் அகமது மேலவை உறுப்பினராக இருப்பவர். சட்டசபையில் என்ன நடக்கிறது, அமைச்சர்களுக்கு இடையே என்ன நடக்கிறது, முதல்வர், துணை முதல்வர் இடையே என்ன பிரச்னை என்பதை, முதலில் தெரிந்து கொள்ளட்டும்.கர்நாடக அரசில் பதவி நாற்காலிக்காக, மோதல் நடக்கிறது. இவ்வளவு அனுபவம் உள்ள முதல்வரும், துணை முதல்வரும் நாற்காலிக்காக முட்டி மோதுவது சரியல்ல. இந்த அரசை மக்கள் கண்டிக்கின்றனர்.அனைத்து விஷயங்களும், சலீம் அகமது தெரிந்து பேசுகிறாரா அல்லது அவரது கவனத்துக்கு வரவில்லையா என்பது தெரியவில்லை. இவரை நினைத்து, நான் பரிதாபப்படுகிறேன். லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் காங்கிரஸ் மண்ணை கவ்வியும், இப்படி பேசினால் நான் என்ன சொல்வது.எம்.எல்.ஏ.,க்களுக்கு அளிக்கப்படும் படி தொகை, டீ குடிக்கவும் போதாது என, சபாநாயகர் காதர் எந்த அர்த்தத்தில் கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை. சட்டசபையில் இதை பற்றி விவாதிக்கட்டும்.ஒரு காலத்தில் மலேரியா, காலரா பாதித்தது போன்று இப்போது டெங்கு வந்துள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெங்கு தீவிரமடையும் போது, உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர், சுகாதார அதிகாரிகள் அக்கறை காண்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை