உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில்: மம்தா பேச்சு

நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில்: மம்தா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நீதித்துறை வளர்ச்சிகள் குறித்து, நடந்த கருந்தரங்கில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மம்தா பேசியதாவது: நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில். இது மந்திர் மற்றும் குருத்வாரா போன்றது. மக்களுக்கு நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீதித்துறை மக்களுடையது.

அரசியல் தலையீடு

மக்களுக்காக செயல்படும் என்று நான் நம்புகிறேன். யாரையும் இழிவுபடுத்துவது எனது நோக்கமல்ல. ஆனால் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொழில்நுட்பம்

கருந்தரங்கில் சந்திரசூட் பேசியதாவது: நீதித்துறை முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நீதியை வலுப்படுத்துவது பற்றி இந்த கருந்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது. நீதிபதிகளாக நாம் எதிர்கொள்ளும் சவால்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
ஜூன் 29, 2024 19:39

சும்மா ரீல் சுத்ததெ அம்மா.


என்றும் இந்தியன்
ஜூன் 29, 2024 18:20

நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில்: மம்தா. நான் செல்வது மசூதி மட்டுமே ஆகவே எனக்கு நீதித்துறை கோவிலாகையால் எனக்கு நம்பிக்கையில்லை சுத்தமாகஎன்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவும்


Pandi Muni
ஜூன் 29, 2024 17:49

உனக்கு மசூதியாச்சே கோயில்னு ஏமாத்திகிட்டு திரியிற


SIVA
ஜூன் 29, 2024 15:06

எனக்கு ஒரு சந்தேகம் எந்த ஒரு பெரிய மனிதரும் அதிகாரம் , செல்வாக்கு , அரசியல் வியாதிகள் எங்கும் எதிலும் காத்து இருப்பது இல்லை , கோயில் , ட்ராபிக் , அவர்களுக்கு ஜுட்ஜ்மெண்ட் தேவை என்றால் அவசர வழக்கு கருணாநிதி சமாதி இரவோடு இரவாக தீர்ப்பூ அப்படி என்றால் அவர்கள் மேல் போடப்படும் ஊழல் வழக்குகளும் ஒரே வாரத்தில் அல்லவா விசாரித்து தீர்ப்பூ வழங்க வேண்டும் , தாமதம் ஏன் ....


subramanian
ஜூன் 29, 2024 14:32

ஆமாம் கோயில்தான் . அப்போதுதானே உள்ளேயே இருக்கும் தெய்வம் நீ எது செய்தாலும் பார்த்து கொண்டு இருக்கும். தெய்வம் நின்று கொல்லும் . நீதிபதியும் , நீதிமன்றமும் தண்டிக்க மறந்தால் தெய்வம் தண்டிக்கும்.


Iniyan
ஜூன் 29, 2024 13:58

நீதி மன்றம் புனிதமாக இருப்பதில் வியப்பில்லை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை