உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தன்னுடைய ஜாமின் மனுவை ரத்து செய்த டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நாளை (24.06.2024) சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்கிறார்,மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கடந்த 20-ம் தேதி ஜாமின் வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த வழக்கில், டில்லி ஐகோர்ட் ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் நாளை( 24.06.2024) சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
ஜூன் 24, 2024 05:25

எங்கும் கிடைக்கவில்லை என்றாலும் ஐநா சபை வரை செல்லத்தயார். யுனஸ்க்கோ மன்றத்தில் மனுச்செய்தால் உடனே ஜாமீன் கிடைக்கும்.


Swaminathan L
ஜூன் 23, 2024 20:46

சமீபத்திய பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் இவரும், இவர் மனைவியும், சக அமைச்சர்கள் சிலரும் என்னென்ன முயற்சிகள், பேச்சுகள் மேற்கொண்டார்கள் ஜாமீன் பெறவும், வழக்கைத் தள்ளுபடி செய்யவும்? எத்தனை முறை சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து கொண்டே இருப்பார்கள்? எளிய உடைகள், பத்து ரூபாய் பால் பாயிண்ட் பேனா என்ற அடையாளத்துக்குப் பினபுலத்தில் கெஜ்ரிவாலின் உண்மை ஸ்வரூபம் என்ன என்பது அம்பலமாகி விட்டது.


Balasubramanian
ஜூன் 23, 2024 20:12

ஊத்திக்கும் நைனா! சென்ற முறை - பாமர மக்களும் அரசியல் வாதிகளுக்கும் ஒரே அளவுகோல் -ஆனாலும் ஜனநாயகத்தை காக்க தேர்தல் பரப்புரைக்காக மட்டுமே என்கிற உயரிய நோக்குடன் அனுமதி அளித்தது! இப்போது அந்த மாதிரி காரணங்கள் எதுவும் இல்லை! பெஸ்ட் ஆஃப் லக்!


M Ramachandran
ஜூன் 23, 2024 19:53

பணம் பாதாலம் வரை பாயும் எங்கிருந்தாலும் சுகபோகா வாழ்க்கை


M Ramachandran
ஜூன் 23, 2024 19:39

உனக்கென்னா எந்த தேச துரோகியோ உனக்காக செலவு செய்றான். சுப்ரீம் கொட்டேன்ன இன்டெர்னஷனால கோர்டில் கூட வாதாடலாம்


Sridhar
ஜூன் 23, 2024 19:38

இவனோட கைது விசயத்துல எவ்வளவு கேஸுதான் போடுவாங்க? கட்சியில அவ்வளவு பணம் இருக்குதா? ஆனா பாருங்க, வேறு எந்த தலைவருக்கும் இந்த அளவுக்கு செலவு செய்யல. மத்த ஆளுங்க கைதாகும்போது பதவியை ராஜினாமா செய்யவச்ச இந்த ஆளு, இவன் கைதாகும்போது மட்டும், பதவியிலேயே ஒட்டிக்கிட்டு இருக்கான். இவன் நடத்துவதும் ஒரு அரசியல் கட்சி, அதுக்கும் மக்கள் ஒட்டு போடுவாங்க, தேர்தல்ல அமோகமா ஜெயிச்சு ஆட்சியை பிடிப்பான். இவன் கட்சிக்காரர்கள் கூத்தையெல்லாம் பார்த்து மக்களும் நல்லா ரசிப்பாங்க என்ன நாடுயா இது? தமிழ்நாட்டிலிருந்து டெல்லி வரை மக்கள் ஒரே மாதிரி இருக்காங்களே


Tetra
ஜூன் 23, 2024 19:25

ஒரு கவலையும் இல்ல. ஜாமீன் கெடச்சுடும்


Bhasskar Kg
ஜூன் 23, 2024 19:19

Why? gives more importance always to this guy


V RAMASWAMY
ஜூன் 23, 2024 18:56

செந்தில் பாலாஜி போல் ஐவரும் ஆரம்பித்து விடுவார், மனு, மனு மேல் மனு பின் அதற்குப்பின் மனு ......இது ஒரு தொடர்கதை.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ