உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சரான பின் வருகை குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு 

மத்திய அமைச்சரான பின் வருகை குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு 

பெங்களூரு: மத்திய அமைச்சரான பின் முதன் முறையாக மாநிலத்துக்கு வந்த குமாரசாமியை, பிரமாண்ட ரோஜா, சாத்துக்குடி ஆரஞ்சு மாலையுடன் தொண்டர்கள் வரவேற்றனர். (அடுத்த படம்) தாய் - தந்தையிடம் குமாரசாமி ஆசி பெற்றார். இடம்: பெங்களூரு.: மத்திய அமைச்சரான பின் முதல் முறையாக கர்நாடகா வந்த குமாரசாமிக்கு, ம.ஜ.த., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி. ம.ஜ.த.,வை சேர்ந்தவர். லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் கனரக தொழிற்சாலைகள் மற்றும் உருக்கு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மத்திய அமைச்சர் ஆன பின்னர், முதன் முறையாக நேற்று கர்நாடகா வந்தார்.பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய குமாரசாமியை, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தேவனஹள்ளியில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். ராட்சத ஆப்பிள், சாத்துக்குடி பழ மாலைகளை அணிவித்து தொண்டர்கள் கவுரவித்தனர்.* மக்கள் ஆசிதொண்டர்கள் மத்தியில் குமாரசாமி பேசியதாவது:என்னை வரவேற்க தொண்டர்கள் இவ்வளவு கூட்டமாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அரசியல் வாழ்வு கொடுத்தது ராம்நகர் மாவட்ட மக்கள். மாண்டியா மக்களின் ஆசியோடு தற்போது மத்திய அமைச்சர் ஆகியுள்ளேன்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, மாண்டியா மக்கள் என்னிடம், 'நீங்கள் இங்கு வந்து பிரசாரம் செய்ய வேண்டாம். உங்களை நாங்கள் வெற்றி பெற வைக்கிறோம். மற்ற வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யுங்கள்' என்று என்னிடம் கூறினர்.* விவசாயிகள் நலன்தற்போது நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழிற்சாலைகள் மற்றும் உருக்கு துறை அமைச்சராகி உள்ளேன். விவசாய துறை அமைச்சராக வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்தது. ஆனால் கடவுள், எனக்கு ஒரு துறையை கொடுத்துள்ளார். விவசாய துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சிவராஜ் சிங் சவுகான், எனது நண்பர். அவரிடம் பேசி நமது மாநில விவசாயிகளின் நலனை பாதுகாப்பேன்.கனரக தொழிற்சாலைகள், உருக்கு துறையின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.* பொறுப்பு அதிகரிப்புஎனக்கு இப்போது பொறுப்பு அதிகரித்துள்ளது. எனது துறைக்கு உட்பட்டு வரும் தொழிற்சாலைகளின் பிரச்னையை சரி செய்வேன். வாரத்தில் ஒரு நாள் கர்நாடகாவில் இருப்பேன். அன்று என்னை சந்தித்து மக்கள் குறைகளை சொல்லலாம்.மக்கள் என்மீது காட்டும் அன்பு தான் எனது சக்தி. தேவகவுடா மனதில் இருப்பதெல்லாம் விவசாயிகள் தான். விவசாயிகளை காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். கோலார், சிக்கப்பல்லாபூர் மாவட்டங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.ம.ஜ.த.,வை முடித்து விடுவோம் என்று சிலர் கூறினர். ஆனால் எங்கள் தொண்டர்கள் இருக்கும் வரை, கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. லோக்சபா தேர்தலில் பழைய மைசூரில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஹாசன், சாம்ராஜ் நகரில் தோற்றது எங்கள் தவறால்தான். மக்கள் மீது எந்த தவறும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்....பாக்ஸ்...* பெற்றோரிடம் ஆசிஇதன்பின் சேஷாத்திரிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு குமாரசாமி சென்றார். அவருக்கு கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் பத்மநாப நகரில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றார். தந்தை தேவகவுடா, தாய் சென்னம்மாவிடம் ஆசி பெற்றார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை