UPDATED : ஜூலை 24, 2024 05:05 AM | ADDED : ஜூலை 24, 2024 01:38 AM
மத்திய பட்ஜெட் நாட்டின் முன்னேற்றத்திற்கானது அல்ல. மோடி அரசை காப்பாற்றுவதற்கானது. ஏழை மக்களுக்காக, ஐ.மு., கூட்டணி அரசால் செயல்படுத்தப்பட்ட புரட்சிகரமான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.மல்லிகார்ஜுன கார்கேகாங்., தேசிய தலைவர்
அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்!
லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, பட்ஜெட் உரையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்துள்ளார் என்பதில் மகிழ்ச்சி. மேலும் பல குறிப்புகளை அவர் காப்பி அடித்திருக்கலாம்.சிதம்பரம்முன்னாள் நிதி அமைச்சர், காங்.,
இன்னும் காப்பி அடித்திருக்கலாம்!
ஆந்திராவின் தேவைகளை உணர்ந்து, தலைநகரம், போலாவரம் உள்ளிட்ட திட்டங்களில் கவனம் செலுத்தி நிதி ஒதுக்கியதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி. இந்த பட்ஜெட் முற்போக்கானது மற்றும் நம்பிக்கை அளிக்கிறது.சந்திரபாபு நாயுடுஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்
நம்பிக்கை அளிக்கிறது!