உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூடப்பட்ட சிலை திறப்பு தலைவர்கள் அதிரடி

மூடப்பட்ட சிலை திறப்பு தலைவர்கள் அதிரடி

தங்கவயல் : தேர்தல் அதிகாரிகளால் மூடப்பட்ட சிலையின் முகத்தை திறந்து, தலைவர்கள் மாலைகள் அணிவித்தனர். இதனை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.லோக்சபா தேர்தலை முன்னிட்டு தங்கவயலில் உள்ள காமராஜர், இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ., சி.எம்.ஆறுமுகம் ஆகியோர் சிலைகளின் முகம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பக்தவச்சலம் ஆகியோர் சுவர் சித்திரங்களும் மறைக்கப்பட்டன.நேற்று அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அம்பேத்கர் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சிகள், தலித் அமைப்புகள் மாலை அணிவித்தனர்.அதே பூங்காவில், அம்பேத்கர் சிலைக்கு அருகில், முகம் மூடப்பட்டிருந்த சி.எம்.ஆறுமுகம் சிலையை திறந்து, பலரும் மாலைகள் அணிவித்தனர். அங்கு தேர்தல் அதிகாரிகள், போலீசார் இருந்தும் கூட கண்டு கொள்ளவில்லை. தேர்தல் அதிகாரிகளின் பாரபட்ச போக்கை பலரும் விமர்சித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை