UPDATED : ஜூலை 24, 2024 05:03 AM | ADDED : ஜூலை 24, 2024 02:12 AM
பிரதமர் மோடி அரசின் பட்ஜெட், தொலைநோக்கு பார்வை இல்லாதது. இந்த பட்ஜெட்டில் எந்த நல்ல திட்டங்களும் இல்லை. ஏழை மக்களுக்கு எதிராக பட்ஜெட் உள்ளது; இது, அரசியல் சார்புடைய பட்ஜெட்.இதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் எந்த பயனும் இல்லை.மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,ஏமாற்றம் நிறைந்தது!மத்தியில் மோடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. ஆட்சியை தக்கவைக்கவும், பாதுகாக்கவும் ஆந்திராவுக்கும், பீஹாருக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்துள்ளனர். உ.பி., உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏமாற்றம் நிறைந்த பட்ஜெட்டாக உள்ளது.அகிலேஷ் யாதவ் உ.பி., முன்னாள் முதல்வர், சமாஜ்வாதிமுற்றிலும் புறக்கணிப்பு!மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், கேரளா மீது பாரபட்சமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. எய்ம்ஸ், பேரிடர் நிவாரண நிதிகள் மற்றும் சுற்றுலாத் துறை குறித்த எங்களது கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.பினராயி விஜயன்கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,