உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் 

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் 

மைசூரு: நடத்தை சந்தேகத்தில், மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மைசூரு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.மைசூரு நஞ்சன்கூடு தெப்பூர் காமத்தை சேர்ந்தவர் ரவி, 37 இவரது மனைவி அமுதலா, 33. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. மனைவி நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.கடந்த 2020ம் ஆண்டு அமுதலா மீது சானிடைசரை ஊற்றி, ரவி தீ வைத்தார். இதனால் அமுதலா உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். நஞ்சன்கூடு போலீசார் ரவியை கைது செய்தனர்.அவர் மீது மைசூரு மாவட்ட 5வது கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி குருராஜ் நேற்று தீர்ப்பு கூறினார். ரவிக்கு ஆயுள் தண்டனை, 11,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை