உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆண்டுக்கு 10 இலவச காஸ் சிலிண்டர் வாக்குறுதியை அள்ளி வீசிய மம்தா

ஆண்டுக்கு 10 இலவச காஸ் சிலிண்டர் வாக்குறுதியை அள்ளி வீசிய மம்தா

கோல்கட்டா :முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.முதற்கட்டமாக, கூச் பெஹர், அலிபுர்துவார்ஸ், ஜல்பைகுரி ஆகிய தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை ராஜ்யசபா எம்.பி., டெரெக் ஓ பிரையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று கோல்கட்டாவில் வெளியிட்டனர்.'தீதியின் வாக்குறுதிகள்' என்ற பெயரில் ஆங்கிலம், ஹிந்தி, உருது, வங்காளம், நேபாளம், சந்தால் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:* அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இலவச வீட்டு வசதி* வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு, ஆண்டுதோறும் 10 இலவச காஸ் சிலிண்டர்கள் * அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வீட்டு வாசலில் இலவச ரேஷன் பொருட்கள் வினியோகம்*ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் * எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்* தேசிய ஊரக வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு, நாள்தோறும் 400 ரூபாய் ஊதியத்துடன் நுாறு நாள் வேலைக்கான உத்தரவாதம்* 25 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளமா முடித்தவர்களுக்கு பயிற்சி* ஓ.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., சமூக மாணவர்களின் உயர்கல்விக்கான உதவித்தொகை மூன்று மடங்கு உயர்த்தப்படும் * மூத்த குடிமக்களின் ஓய்வூதியம், 1,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் * சி.ஏ.ஏ., சட்டம் ரத்து செய்யப்படும்; நாட்டில் பொது சிவில் சட்டம் இருக்காது * நாடு முழுதும் பெண்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஏப் 18, 2024 11:18

மூர்க்கம் அதிகமுள்ள மாநிலத்தில் சிலிண்டர் வேறு பயன்பாட்டுக்கு போகும். பயங்கரவாதமே வளரும்.


RAAJ68
ஏப் 18, 2024 09:02

வருடத்திற்கு 11 சிலிண்டர்கள் இலவசம் நல்ல வரவேற்பு தான் ஆனால் உங்கள் உங்கள் மாநிலம் திவால் ஆகிவிடும். இலவசங்களை கொடுப்பதற்கு மத்திய அரசிடம் நீங்கள் கையேந்தி நிற்க வேண்டும் இது சாத்தியமா.


RAAJ68
ஏப் 18, 2024 09:01

இந்த தடவை என்ன நாடகம் போடப் போகிறீர்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 18, 2024 20:22

சென்றமுறை வீல் சேர் இப்போது ஸ்டெச்சராக இருக்கலாம்


தமிழ் குணா
ஏப் 18, 2024 07:25

எங்கப்பா அந்த வீல் சேர்


mdg mdg
ஏப் 18, 2024 05:43

CBI, NIA, ED,,NCB, cvc போன்ற அமைப்புகளுக்கு நிரந்தர மாக மூடப்படும் இத இவங்க தேர்தல் அறிக்கையில் சேர்த்துக்கோங்க


குமரி குருவி
ஏப் 18, 2024 05:43

நாட்டை நாசமாக்கும் இலவச வாக்குறுதி


Jagan (Proud Sangi)
ஏப் 18, 2024 02:08

எல்லோருக்கும் மாருதி கார்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி